சுனில் ஹதுன்நெத்தி தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கையை மேற்கோள் காட்டுகிறாரா?

ஹதுன்நெத்தியின் கருத்து திரிபுபடுத்தப்பட்டு பிரதான ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளது என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.
by Anonymous |
ஜூன் 24, 2024

தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகளின் கருத்துக்களை திரித்து செய்திகளை வெளியிடுவது வாடிக்கையான நிகழ்வாகும். ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், அந்த நிலை மேலும் மேலும் அதிகரித்து வருகிறது.
இதேவேளை, கடந்த (20) தேசிய செயற்குழு உறுப்பினர் சுனில் ஹதுன்நெத்தி தெரிவித்த கருத்து தொடர்பில் தினமின பத்திரிகையின் முதற்பக்கத்தில் வெளியான செய்தியை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
தினமின நாளிதழின் முதற்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், “பொருளாதார நெருக்கடிக்கு மூன்றே தீர்வுகள் உள்ளன. பொது நிறுவனங்களை விற்பது, புதிதாக பணம் அச்சிடுவது மற்றும் பொது மக்களின் வங்கி வைப்புத்தொகையை எடுப்பது “. என்று அவர் கூறியதாக வெளியாகியிருந்தது.
அதேபோல், தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செய்தியை மேற்கோள்காட்டி தினமின பத்திரிகை இதனைத் தெரிவித்திருந்தது.
கடந்த 18ம் தேதி தேசிய தொலைக்காட்சி செய்தியில் இப்படித்தான் ஒளிபரப்பானது. https://www.youtube.com/live/nJkYeW21K2I?si=K-a8GswfCvLtfG0v
ஆகவே இது குறித்து Factseeker ஆராய்ந்து பார்த்தது.
இது தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் ஊடகப் பிரிவினரிடம் Factseeker வினவியபோது, சுனில் ஹதுன்நெத்தி வெளியிட்ட திரிபுபடுத்தப்பட்ட கருத்து அடங்கிய காணொளி ‘தினமின’ பத்திரிகையில் வெளியாகியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். அத்துடன், கடந்த வருடம் “neth fm” வானொலி நிலையத்திற்கு வழங்கிய நேர்காணலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதியையே இவ்வாறு திரிபுபடுத்தியுள்ளதாக ஊடகப் பிரிவு தெரிவித்தது.
இதேவேளை, சுனில் ஹதுன்நெத்தி தனது முகநூலில் (Facebook ) பகிர்ந்துள்ள காணொளி ஒன்றையும் Factseekerஇனால் அவதானிக்க முடிந்தது, அது அவரது அறிக்கையின் ஒரு பகுதியை மேற்கோள் காட்டி தவறான முறையில் பதிவிடப்பட்டுள்ளது. https://www.facebook.com/share/v/kvcKCL2eL9Ccwb2R
அதன்படி, Neth Fm யூடியூப் செய்திச் சேவயில் தேடியபோது, இது 2023 டிசம்பர் 21 அன்று சுனில் ஹதுன்நெத்தி பங்கேற்ற “Net Fm Unlimited” அரசியல் உரையாடலில் இருந்து எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது.
அந்த அரசியல் உரையாடல் https://youtu.be/9LVu4n2B3-0?si=HpkC1dS2kUTgAjiz
நேர்காணலின் போது, ”வட்(VAT) வரியை அதிகரிக்க அரசாங்கம் தயாராகி வந்தது. இத்தகைய பொருளாதார நெருக்கடியில் வட் வரியை அதிகரிப்பதைத் தவிர வேறு வழிகள் அரசுக்கு உள்ளதா?” என்று அறிவிப்பாளர் அங்கு ஒரு கேள்வியை எழுப்பினார்.
“செலவுகளை நிர்வகிப்பதே அரசாங்கத்திடம் உள்ள தீர்வு” என சுனில்ஹு ஹதுன்நெத்தி சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் கருத்து தெரிவிக்கும் சுனில் ஹதுன்நெத்தி தெரிவிக்கையில்,
“நாட்டின் வருமானம் 4164 பில்லியன் ரூபாவாக இருக்கும் போது செலவு 11000 பில்லியன் ரூபாவாகும். அடுத்த ஆண்டு (2024) உலக வங்கி, IMF, ஆசிய வளர்ச்சி வங்கி அனைத்தும் 1.5 பில்லியன் டொலர் கடனை செலுத்த வேண்டும். இவற்றை செலுத்த முடியாமல் போனால், தற்போதுள்ள அரசு வணிக நிறுவனங்கள், விற்பனைக்கு வந்தவற்றை ஏலம் விடுவது போல் விற்பனை செய்வது தவிர்க்க முடியாது. பதில் ஒன்றுதான், இல்லையேல் பணம் புதிதாக அச்சிடப்பட வேண்டும். வங்கிகளில் வைப்பு (deposit) செய்பவர்களின் பணத்தை அரசு எடுத்து செலவழிக்க வேண்டும் என்பது மற்றொரு பதில். அந்த மூன்று பதில்களும் நான் கற்றுக்கொண்டவை.”
அதன்படி, டிசம்பர் 21, 2023 அன்று “Neth Fm Unlimited” அரசியல் உரையாடலில் சுனில் ஹதுன்நெத்தி தெரிவித்த கருத்துக்களில் ஒரு பகுதியை மட்டும் மேற்கோள் காட்டி சுனில் ஹதுன்நெத்தி தவறாகப் கூறியதாக தினமின பத்திரிகையும் தேசிய தொலைக்காட்சியும் செய்தி வெளியிட்டிருந்தன. ஆகவே இது திரிபுபடுத்தப்பட்ட செய்தி என்பதை Factseeker உறுதிப்படுத்தப்படுகிறது.