சிறுவர்களால் செய்யப்பட்ட மணல் உருவ பொம்மைகள் என பகிரப்படும் AI புகைப்படங்கள்

இப் புகைப்படங்கள் 99% செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.
by Anonymous |
டிசம்பர் 6, 2024

“மணலில் செய்யப்பட்ட இப்பிள்ளிகளின் திறமைகளை விமர்சிக்காமல் மதிக்கவும்” என்ற பதிவுகளுடன் சிறுவர்கள் மணலால் உருவ பொம்மைகளை செய்வது போன்ற புகைப்படங்கள் சில சமூகவலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.

அப் பதிவுகளுக்கு பலரும் இது உண்மையென தமது கருத்துக்களை பதிவிட்டு வந்தாலும் இப் புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் போல் இருப்பதால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.

இப் புகைப்படங்களில் உள்ள சில சூழலியல் அம்சங்களை அவதானித்ததில் தெளிவற்ற சில அம்சங்களை அவதானிக்க முடிந்தது. உதாரணமாக அச் சிறுவர்களின் பின் உள்ள சில மனிதர்களின் உடல் மற்றும் முகங்கள் தெளிவற்று சிதைவடைந்து இருபத்தை அவதானிக்க முடிந்தது.
மேலும், இப் புகைப்படங்களை AI detector Tools மூலம் ஆராய்ந்ததில் இவை 99% செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

ஆகவே, சமூகவலைதளங்களில் பகிரப்படுகின்ற இப் புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.
 
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                            