சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் பாரிஸ் திருவிழா கடந்த ஆண்டில் நடைபெற்றதாகும்
இந்த காணொளி குறித்து ஏற்கனவே factseeker ஆராய்ந்து உண்மை என்ன என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
by Anonymous |
ஜூலை 23, 2024
“பிரான்ஸ் #France தலைநகர் பாரிசில் இடம்பெற்ற பாரிய ரத பவனி சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது” என பதிவிடப்பட்ட காணொளியொன்று எக்ஸ் வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ளதுடன், அதே காணொளி மேலும் சில எக்ஸ் பயனாளர்களாலும் வெவ்வேறு தலைப்புகளில் பதிவிடப்பட்டுள்ளதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
எனினும் இந்த காணொளி குறித்து ஏற்கனவே factseeker ஆராய்ந்து உண்மை என்ன என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
link :https://factseeker.lk/tamil/news/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95/
இவ்வாறு பகிரப்படும் காணொளியானது, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பாரிஸில் நடைபெற்று திருவிழா என்பதுடன், பல்வேறு நாடுகளின் பக்தர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் இத்திருவிழா பாரிஸில் நடைபெறுவதுடன், இந்த ஆண்டும் செப்டெம்பர் மாதத்தில் இந்த நிகழ்வகள் நடைபெறும் என ஏற்பாட்டாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.