சமூக வலைதளங்களில் பகிரப்படும் இந்தப்புகைப்படம் போலியானது
ரில்வின் சில்வாவின் போலியான புகைப்படமே இவ்வாறு சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றது
by Anonymous |
மார்ச் 11, 2024
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எழுதிய “ஜனாதிபதி பதவியில் இருந்து தம்மை வெளியேற்றிய சதி” என்ற புத்தகத்தை சமூக வலைதளங்களில் பலர் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவின் கையில் குறித்த புத்தகம் இருப்பதைப்போன்ற புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
எனினும் இந்த புகைப்படமானது போலியாக வடிவமைக்கப்பட்ட புகைப்படம் என்பதை factseeker உறுதிப்படுத்துவதுடன், இவ்வாறான புகைப்படங்கள் அதிகளவில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதையும், அவற்றை உண்மையென நம்பி பகிர வேண்டாம் எனவும் factseeker வலியுறுத்துகின்றது.