சந்திரிக்காவின் பழைய புகைப்படமே மீண்டும் பகிரப்படுகின்றது

இந்த புகைப்படமானது கடந்த 2021ஆம் ஆண்டு அவர் லண்டலில் தங்கியிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படமாகும்
by Anonymous |
பிப்ரவரி 16, 2024
“மோசமான ஆட்சியாளர்களின் நிலைமை” என விமர்சித்து, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க லண்டன் வீதிகளில் நடமாடும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
எனினும் இந்த புகைப்படமானது கடந்த 2021ஆம் ஆண்டு அவர் லண்டலில் தங்கியிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.
பழைய புகைப்படம் இங்கே :
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தற்போது இலங்கையில் வசித்து வருவதுடன் அவர் மீண்டும் நேரடி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது
ஆகவே, அவரது பழைய புகைப்படமே தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.