சஜித்திற்கு தமிழர்கள் வாக்களிக்குமாறு அரியநேந்திரன் அறிவித்துள்ளதாக போலிக் கடிதம்

நாளை வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில் மக்களை குழப்பும் விதத்தில் இவ்வாறான போலிக் கடிதம் பகிரப்படுகின்றது.
by Anonymous |
செப்டம்பர் 20, 2024

நாளை (21) நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தொலைபேசி சின்னத்திற்கு முதல் வாக்கையும், இரண்டாம் வாக்கை தமிழ்த் தேசியத்திற்காக சங்கு சின்னத்திற்கும் அளிக்குமாறு மக்களை கேட்டுக்கொள்வதாக தமிழ் பொது வேட்பாளர் திரு பாக்கியச்செல்வம் அரியநேந்திரன் அறிவித்துள்ளதாக கடிதமொன்று சமூக வலைதளங்கள் மற்றும் வட்சப் குழுக்களில் பகிரப்படுகின்றது.
இது குறித்து பொது வேட்பாளர் திரு பாக்கியச்செல்வம் அரியநேந்திரனிடம் factseeker நேரடியாக வினவியபோது, சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் எந்தவொரு தீர்மானமும் தமது தரப்பினால் எடுக்கப்படவில்லை எனவும், இது தமிழ் மக்களை குழப்பி வாக்குகளை சிதறடிக்கச்செய்ய முன்னெடுக்கப்படும் சதி எனவும் அவர் தெரிவித்தார்.
ஆகவே, இது மக்களை குழப்பமடைய செய்யும் விதத்தில் போலியாக தயாரிக்கப்பட்ட கடிதம் என்பதனை factseeker உறுதிப்படுத்துகின்றது.