Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #FAKE

சஜித்தின் கையொப்பத்துடன் பகிரப்படும் போலியான கடிதம்

False
False

ஜூன் மாதத்தில் 30 நாட்களே உள்ள நிலையில், இந்த கடிதத்தின் உண்மைத்தன்மை குறித்து factseeker ஆராய்ந்து பார்த்ததில் இக்கடிதம் போலியாக உருவாக்கப்பட்ட ஒன்றென factseeker இனால் கண்டறிய முடிந்தது

by Anonymous |

ஏப்ரல் 24, 2024

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் இடையில் இடம்பெறவுள்ள விவாதம் தொடர்பில் இந்த நாட்களில் அதிகளவில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் விவாதிக்கத்தயார் எனக்கூறியும், மே மாதம் 7, 9, 13, 14 ஆகிய திகதிகளில் சஜித் பிரேமதாச விரும்பும் எந்தவொரு நாளிலும் விவாதம் நடத்தலாம் எனவும் தெரிவித்து தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ கையொப்பமிட்ட கடிதம் ஒன்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்தக் கடிதத்திற்கு பதில் தெரிவித்ததாக கூறும் கடிதம் ஒன்று தற்போது சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

இதில், எதிர்வரும் ஜூன் மாதம் 31ஆம் திகதி குறித்த விவாதத்தில் கலந்துகொள்ள முடியும் எனக்கூறி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கையொப்பத்துடன் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறியே இக்கடிதம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

எனினும், ஜூன் மாதத்தில் 30 நாட்களே உள்ள நிலையில், இந்த கடிதத்தின் உண்மைத்தன்மை குறித்து factseeker ஆராய்ந்து பார்த்ததில் இக்கடிதம் போலியாக உருவாக்கப்பட்ட ஒன்றென factseeker இனால் கண்டறிய முடிந்தது. மேலும் இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தின் ஊடகப் பிரிவிடம் வினவியபோது, சஜித் பிரேமதாச அவ்வாறான கடிதமொன்றை அனுப்பவில்லை எனவும், விவாதம் குறித்த எந்தவித உத்தியோகபூர்வ அறிவிப்புகளும் இன்னமும் வெளியிடப்படவில்லை என்பதையும் தெரிவித்தனர்.

எனவே சமூக வலைதளங்களில் பகிரப்படும் இந்த கடிதம் போலியானது என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.

Latest updates

#false

இந்தோனேசிய வெள்ளம் எனப் பகிரப்படும் AI காணொளி

பிப்ரவரி 13, 2026

#FAKE

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேயிலை கொழுந்து பறிக்கும் கூடையைச் சுமந்து செல்வது போன்ற புகைப்படம் போலியானது

பிப்ரவரி 12, 2026

#AI generated

பாலம் இடிந்து விழுந்ததாக பகிரப்படும் AI காணொளி : Grok AI-இன் பதில்களிலும் தவறு

பிப்ரவரி 9, 2026

#false

சனூஸ் எம்.பெரோஸ் அவர்கள் 2022 இல் காலமானார் : இன்றென பகிரப்படும் தவறான செய்திகள்

பிப்ரவரி 3, 2026

Related Content

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேயிலை கொழுந்து பறிக்கும் கூடையைச் சுமந்து செல்வது போன்ற புகைப்படம் போலியானது

பிப்ரவரி 12, 2026

நடிகர் விஜய்யின் படங்களை இலங்கையில் வெளியிட ஜனாதிபதி அநுர தடை விதிக்கவில்லை

ஆகஸ்ட் 28, 2025

ஜெசிக்கா ராட்கிளிப் என்ற கடல் பயிற்சியாளரை ஒர்கா (Orca) திமிங்கலம் கொன்றதாக பகிரப்படும் AI காணொளி

ஆகஸ்ட் 14, 2025

ஊடகங்களை அச்சுறுத்தும் விதத்தில் சீன தூதரகம் அனுப்பியதாக பகிரப்படும் போலிக் கடிதம்

ஆகஸ்ட் 6, 2025

தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு செல்ல இலவச நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படுகிறதா?

ஜூன் 25, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection