சஜித்தின் கையில் அநுரவின் விஞ்ஞாபனமென பகிரப்படுவது போலியான புகைப்படமாகும்.
சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் திரிபுபடுத்தப்பட்ட புகைப்படம் என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.
by Anonymous |
செப்டம்பர் 4, 2024
ஐக்கிய மக்கள் சக்தியின் ஐனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தேசிய மக்கள் சக்தியின் ஐனாதிபதி வேட்பாளரான அநுரகுமார திசாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை கையில் வைத்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
இப் புகைப்படம் X மற்றும் YOUTUBE தளங்களில் பகிரப்பட்டிருப்பதால் factseeker இதனை ஆராய்ந்தபோது, இந்த புகைப்படம் ஆகஸ்ட் 29 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் ஐனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்ட போது தலதா மாளிகையில் எடுக்கப்பட்ட புகைப்படம் என அறியமுடிந்தது.
இப் புகைப்படம் ஐக்கிய மக்கள் சக்தியின் ஐனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் காணக்கூடியதாக இருந்தது.
Facebook page : https://www.facebook.com/photo/?fbid=1077330697086495&set=pcb.1077331357086429
அதேபோல், தேசிய பத்திரிகைகளிலும் இப் புகைப்படத்தை காண முடிந்தது.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஐனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச தேசிய மக்கள் சக்தியின் ஐனாதிபதி வேட்பாளரான அநுரகுமார திசாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வைத்திருப்பது போன்ற சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் திரிபுபடுத்தப்பட்ட புகைப்படம் என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.