கோவிலில் தேங்காய் உடைக்கும் காணொளி இலங்கையில் இடம்பெற்ற ஒன்றல்ல
இது இலங்கையிலுள்ள கோவில் ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் என பலராலும் தெரிவிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
by Anonymous |
ஜனவரி 16, 2024
கோவிலுக்கு அருகில் தேங்காய் குவியல்களுடன் ஒருவர் தரையில் அமர்ந்து தேங்காய்களை அடித்து உடைக்கும் காணொளியொன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
இது இலங்கையிலுள்ள கோவில் ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் என பலராலும் தெரிவிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
இவ்வாறு பகிரப்படும் காணொளியின் உண்மைத்தன்மை குறித்து factseeker ஆராய்ந்து பார்த்ததில், இது இந்தியாவின் கேரளா மாநிலத்தில் இடம்பெற்ற நிகழ்வு என்பதை கண்டறிய முடிந்தது.
அதன்படி, அது இந்தியாவின் நம்பிக்கைக் கடவுளான வேட்டக்கொருமகனுக்கு செய்யப்படும் சம்ரதாயம் என்பதையும் உறுதிப்படுத்த முடிந்தது.
பந்திராயரம் தேங்காய்யேறு (தொடர்ந்து 12000 தேங்காய் உடைத்தல்) என்பது வேட்டக்கொருமகன் வழிபாட்டில் நடத்தப்படும் ஒரு சிறப்பு விழாவாகும்.
இந்தச் சடங்கில் சுமார் 12000 தேங்காய்கள் “செண்ட மேளம்” (-கடவுள் மற்றும் தெய்வங்களை அழைக்கும் ஒரு பாரம்பரிய கருவி) அடித்து தேங்காய்கள் ஒவ்வொன்றாக உடைக்கப்படுகின்றன.
அதன்படி, இது இலங்கையில் நடந்த நிகழ்வு அல்ல என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.