கோலி-அனுஷ்கா இருவரும் நக்கிள்ஸில் எடுத்துக்கொண்ட புகைப்படமா இது?
இந்தப் புகைப்படத்தை அனுஷ்கா ஷர்மா தனது உத்தியோகபூர்வ Instagram பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
by Anonymous |
ஆகஸ்ட் 6, 2024
இலங்கை கிரிக்கெட் அணியுடன் போட்டிகளில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு வந்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, தனது மனைவியுடன் இலங்கையின் நக்கிள்ஸில் உள்ள ‘தூவிலி’ நீர்வீழ்ச்சியை பார்வையிட்டதாக புகைப்படமொன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
எனினும், இந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்த்தபோது, இது இலங்கையில் எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல என்பதை factseeker இனால் உறுதிப்படுத்த முடிந்தது.
‘Google reverse image search’ மூலம் ஆராய்ந்தபோது, இந்தப்புகைப்படம் இலங்கையில் எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல என தெரியவந்தது.
அதேபோல் இந்த புகைப்படம் 2019 இல் பூட்டானில் விடுமுறையின் போது விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா ஆகியோர் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படமாகும். இந்தப் புகைப்படத்தை அனுஷ்கா ஷர்மா தனது உத்தியோகபூர்வ Instagram பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
link : https://www.instagram.com/p/B4c2AK4J0lV/?igsh=cjVqdGkydTg1MWI0