கொழும்பு மஹாநாம கல்லூரியின் ஊடகப் பிரிவுக்கு சொந்தமான முகநூல் ‘ஹேக்’ செய்யப்பட்டது
இந்தக் கணக்கு ஹேக் செய்யப்பட்டதன் பின்னர், ஆபாசமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் என்பவற்றை பதிவேற்றியுள்ளதாகவும், ஒரே இரவில் இந்த முகநூல் கணக்கை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 2000 இலிருந்து 3000 ஆக அதிகரித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
by Anonymous |
ஆகஸ்ட் 14, 2023
அண்மையில் கொழும்பு மஹாநாம கல்லூரியின் ஊடகப் பிரிவுக்கு சொந்தமான முகநூல் கணக்கு சிலரால் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
இது தொடர்பில் Factseeker ஆராய்ந்ததில், கடந்த 09ஆம் திகதி முதல் இந்த முகநூல் கணக்கை சிலர் ஹேக் செய்துள்ளதாக தெரியவந்தது. மஹாநாம கல்லூரியின் ஊடகப்பிரிவின் முகநூல் கணக்கில் 10000க்கும் அதிகமான பாவனையாளர்கள் உள்ளதாகவும், பாடசாலை மாணவர்கள் ஆகஸ்ட் 4 ஆம் திகதி தமது செயற்பாடுகளை பதிவேற்றம் செய்துள்ளதாகவும் பாடசாலையின் அதிபர் பிரபாத் ஐ.விதானகே Factseeker இடம் தெரிவித்தார்.
இந்தக் கணக்கு ஹேக் செய்யப்பட்டதன் பின்னர், ஆபாசமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் என்பவற்றை பதிவேற்றியுள்ளதாகவும், ஒரே இரவில் இந்த முகநூல் கணக்கை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 2000 இலிருந்து 3000 ஆக அதிகரித்ததாகவும் அதிபர் தெரிவித்தார்.
இது குறித்து கணினி குற்றப் புலனாய்வுப்பிரிவிற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், கூடிய விரைவில் தமது முகநூல் கணக்கு மீட்டெடுக்கப்படும் என்றும் அதிபர் மேலும் தெரிவித்தார்.