காலஞ்சென்றவர் பூடீ கீர்த்திசேன அல்ல
by Anonymous |
அக்டோபர் 18, 2023
மூத்த திரைப்பட இயக்குனர் பூடீ கீர்த்திசேன (Vishvanath Buddhika Keerthisena- Boodee Keerthisena) காலமானதாக Hiru Gossip முகப்புத்தக கணக்கில் பதிவிடப்பட்ட செய்தியொன்று தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
இந்த பதிவானது முகப்புத்தக பாவனையாளர்கள் மத்தியில் அதிகவில் பகிரப்பட்டு வருவதையும் factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
ஆனால், காலமாகியிருப்பது பூடீ கீர்த்திசேனவின் தந்தையாகிய தேசிய கைவினைப் பேரவையின் முன்னாள் தலைவர், மூத்த ஊடகவியலாளர் புத்தி கீர்த்திசேனவாகும்.
இந்தப்பதிவு முகநூல் பக்கத்தில் பகிரப்பட்ட நேரத்தில், Hiru Gossip இணையத்தளத்தை factseeker கண்காணித்து பார்த்தபோது, Hiru Gossip இணையத்தளத்தில் அவ்வாறான செய்திகள் எதுவும் காணப்படவில்லை.
ஆகவே, முகநூலில் பகிரப்பட்ட இந்த செய்தி பொய்யானது என்பதுடன், இறந்தவர் பூடீ கீர்த்திசேன அல்ல என்றும் அவரது தந்தை புத்தி கீர்த்திசேன என்றும் Factseeker உறுதிப்படுத்துகிறது.