கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை பாப்பரசராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக பகிரப்படும் போலிச்செய்தி

புதிய பாப்பரசர் நியமிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை
by Anonymous |
மே 7, 2025

புனித பாப்பரசர் பிரான்சிஸின் மறைவை அடுத்து, புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான சம்ரதாய நடைமுறைகள் தற்போது வத்திக்கானில் இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்றைய தினம் (07 )புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் மற்றும் வத்திக்கானின் உத்தியோகபூர்வ செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
புதிய பாப்பரசராக தெரிவாகுவதற்காக வாக்கெடுப்பு நடத்தப்படும் கார்டினல்களின் பெயர்கள் மற்றும் தகவல்களின் பட்டியல் இங்கே:
https://www.catholic-hierarchy.org/bishop/scardc3.html
கத்தோலிக்க சமூகத்திற்கு மிகவும் பரபரப்பான செய்தியாக இருக்கும் இந்த நேரத்தில், கொழும்பின் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை பாப்பரசராக தெரிவாகிவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
எனினும், புதிய பாப்பரசர் நியமிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், சர்வதேச ஊடகங்களோ தேசிய ஊடகங்களோ அவ்வாறான செய்திகளை பிரசுரிக்கவும் இல்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது. புதிய பாப்பரசரை நியமிப்பதற்கான மாநாடு, மே 7, 2025 அந்நாட்டு நேரப்படி காலை 10 மணிக்கு (இலங்கை நேரப்படி மதியம் 1.30 மணி ) செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் பொது திருப்பலியுடன் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்த சில புதிய வெளிநாட்டு செய்திகள் இங்கே:
https://www.bbc.com/news/articles/c15v5n0knv3o
https://www.abc.net.au/news/2025-05-07/conclave-begins-to-elect-new-pope/105240966
ஆகவே, 267வது பாப்பரசராக பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தேர்ந்தெடுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்திகள் போலியானவை என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.