கதிர்காமத்தில் நடந்த உண்மைச் செய்தியென பகிரப்படும் போலி துண்டுப்பிரசுரம்

மக்களை ஏமாற்றும் இவ்வாறான பல போலித் தகவல்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன.
by Anonymous |
ஜூன் 3, 2024

கதிர்காமத்தில் நடந்த உண்மைச் செய்தி என தெரிவித்து துண்டுப்பிரசுரமொன்று தற்போது சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
இதில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விடயங்கள் கற்பனையாகவும், மக்களை ஏமாற்றும் வகையிலும் எழுதப்பட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது. அத்துடன் இந்த துண்டுப்பிரசுரத்தில் கூறியுள்ள கற்பனை விடயங்களைப் போன்ற எதுவும் இடம்பெறவில்லை என கதிர்காமம் ஆலய நிருவாகம் தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியாக பல்வேறு வழிமுறைகளில் மக்களை ஏமாற்றும் இவ்வாறான பல சம்பவங்களை அடையாளம் கண்டு factseeker மக்களை தெளிவுபடுத்தி வருகின்ற நிலையில் இந்த துண்டுப்பிரசுரமும் மக்களை ஏமாற்றும் போலிச்செயல் என்பதை தெரிவிக்கின்றது.