ஒரே ஓவரில் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தி உலகசாதனை என பகிரப்படும் தவறான காணொளி

உண்மையான காணொளி திரிபுபடுத்தப்பட்டு பகிரப்படுகின்றது.
by Anonymous |
ஜனவரி 7, 2026

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியொன்றில் ஒரே பந்துவீச்சு ஓவரில் ஆறு பந்துகளில் ஆறு விக்கெட்டுக்களை வீழ்த்தினார் என்ற காணொளியொன்று facebook பக்கத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
SLAS SLEAS GK Leading Srilanka என்ற பெயரைக் கொண்ட facebook கணக்கில் இந்த காணொளி பகிரப்பட்டுள்ள நிலையில் இந்த காணொளியை பலர் பகிர்ந்தும் உள்ளனர்.
போலியாக பகிரப்படும் காணொளி : https://www.facebook.com/100063700322069/posts/1279812843972057/?rdid=nP68wmiRhV5GUG1N
எனினும் இவ்வாறான ஒரு சாதனையை எந்தவொரு கிரிக்கெட் வீரரும் இதுவரை எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் ( ஒருநாள் /டெஸ்ட் /ரி-2௦) நிகழ்த்தவில்லை.
எனினும் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரியில் அவஸ்திரேலிய அணியுடன் இடம்பெற்ற டெஸ்ட் தொடரில் இரண்டாவது போட்டியில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டதாக அந்த போட்டியின் காணொளியை திரிபுபடுத்தியே இந்த காணொளி பகிரப்படுகின்ற நிலையில் குறித்த கிரிக்கெட் போட்டியின் முடிவுகளை இங்கே இணைத்துள்ளோம்.

இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் 11.5 ஓவர்கள் பந்துவீசி 68 ஓட்டங்களை கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
ஆகவே உலக சாதனை எனக்கூறி பகிரப்படும் இந்த காணொளி திரிபுபடுத்தப்பட்ட ஒன்று என்பதுடன், தவறான தகவல் பகிரப்படுகின்றது என்பதையும் factseeker உறுதிப்படுத்துகின்றது.
