ஒமிக்ரோன் திரிபை தடுப்பூசி மூலம் கட்டுப்படுத்த முடியாது என்று டாக்டர் பத்மா குணரத்ன கூறினாரா?

ஒமிக்ரோன் திரிபை தடுப்பூசி மூலம் கட்டுப்படுத்த முடியாது என்று டாக்டர் பத்மா குணரத்ன கூறினாரா?
by Anonymous |
செப்டம்பர் 12, 2023
திவயின பத்திரிகையில் “தடுப்பூசி மூலம் ஒமிக்ரோன் திரிபைக் கட்டுப்படுத்த முடியாது” என்ற தலைப்பில் டிசம்பர் 3 ஆம் திகதி ஒரு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி, இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவரும் நரம்பியல் நிபுணருமான டாக்டர் பத்மா குணரத்ன, டிசம்பர் 2 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஒமிக்ரோன் திரிபை தடுப்பூசிகளால் கட்டுப்படுத்த முடியாது என கூறியதாக அச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.