எலோன் மஸ்க்கின் ஹைப்பர்சோனிக் போர் விமானமென பகிரப்படும் புகைப்படம் போலியானது

எலோன் மஸ்க் இது போன்ற எந்த திட்டத்திலும் தற்போது ஈடுபடவில்லை
by Anonymous |
நவம்பர் 7, 2024

“Tesla நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், ஹைப்பர்சோனிக் போர் விமானம் ஒன்றை வடிவமைப்பதில் ஈடுபட்டுள்ளார்.” என புகைப்படங்கள் சில சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
இப் புகைப்படங்கள் இலங்கையிலும் சர்வதேச அளவிலும் அதிகம் பகிரப்படுவதால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.
சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட அப் புகைப்படங்களை Google Lens மூலம் ஆராய்ந்ததில், Tesla மற்றும் SpaceX ஆகிய தரப்புகளால் இவை வெளியிடப்படவில்லை என்பதையும் அந்நிறுவனங்களின் இணையதளங்களில் இது போன்ற திட்டம் குறித்து எந்த அறிவிப்புகளும், அறிக்கைகளும் வெளியிடவில்லை என்பதையும் உறுதிப்படுத்த முடிந்தது.
மேலும்,”UFO Fighter Jet developed by Tesla” எனும் தலைப்பில் இது போன்றே சில படங்கள் வெளிநாட்டு ஊடகங்களில் பரவிவருவதை அறிய முடிந்தது.
அப் புகைப்படங்கள் செயற்க்கை நுண்ணறிவை பயன்டுத்தி உருவாக்கப்பட்டவையா என Sightengine.com தளத்தில் ஆராய்ந்ததில் அப் புகைப்படங்களில் பெரும்பாலானவை செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.
மேலும், வெளிநாட்டு இணையத்தளங்களான ‘Medium’ மற்றும் ‘Slashgear’ ஆகிய தளங்களில் இது குறித்து வெளியாகிய கட்டுரைகளை அவதானிக்க முடிந்ததது. அக் கட்டுரைகளில், மஸ்க் இது போன்ற எந்த திட்டத்திலும் தற்போது ஈடுபடவில்லை என்றும் போர்விமானம் ஒன்றை உருவாக்கி வருவதாக எந்த நம்பத்தகுந்த ஆதாரமும், அறிவிப்பும், அறிக்கையும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.
• https://fixyourfin.medium.com/elon-musk-unveils-ufo-fighter-jet-that-defies-physics-c3f990079e0e#:~=Elon%20Musk%20has%20stunned%20the%20world%20with,the%20mind%2Dblowing%20technology%20behind%20this%20incredible%20aircraft
• https://www.slashgear.com/1692227/elon-musk-ufo-fighter-jet-is-it-real/
ஆகவே, 2024 இல் எலான் மஸ்க் போர் விமானங்கள் உருவாக்குவதில் ஈடுபடவில்லை என்பதையும் அவ்வாறான பதிவுகளுடன் பகிரப்படுகின்ற புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகிறது.