எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் இழப்பீடு 8 லட்சத்து எழுபத்தி எட்டாயிரம் டொலர்களாகும்

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றியதால் ஏற்பட்ட அனர்த்தத்திற்கு தற்போது 8 இலட்சத்து ஐயாயிரம் அமெரிக்க டொலர்களை இழப்பீடாக வழங்குவதற்கு
by Anonymous |
செப்டம்பர் 11, 2023

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றியதால் ஏற்பட்ட அனர்த்தத்திற்கு தற்போது 8 இலட்சத்து ஐயாயிரம் அமெரிக்க டொலர்களை இழப்பீடாக வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட காப்புறுதி நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ கடந்த 25ஆம் திகதி பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
பாராளுமன்றத்தில் அமைச்சர் கூறிய இந்த விடயங்கள் பிரதான ஊடகங்களில் செய்தியாக வெளியாகியுள்ளது.
ஆனால் இந்த தொகையில் முரண்பாடுகள் இருப்பதாக சமூக ஊடகங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளன.
இது தொடர்பில் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் factseeker வினவியபோது, இந்த நட்டஈடு எட்டு இலட்சத்து ஐயாயிரம் மில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்ல, எட்டு இலட்சத்து எழுபத்தி எட்டாயிரம் டொலர்கள் என அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் திடீர் கேள்விக்கு பதிலளிக்கும் போதே இந்த புள்ளிவிபரங்கள் முரண்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
நீதி, சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சகமும் அமைச்சரின் தவறான தகவலை சரி செய்து அறிக்கையொன்றையும் வெளியிட்டிருந்தது.