உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் வீரகெட்டிய கூட்டுறவுச் சங்கத்தின் தேர்தல் நடாத்தப்பட்டதா?

வீரகெட்டிய கூட்டுறவுச் சங்கத்தின் தேர்தல் 2024 டிசம்பர் 29 அன்று நடைபெற்றதாகவும் கடந்த மார்ச் 16 ஆம் திகதியன்று இடம்பெற்றது மகா சபைக் கூட்டமே, தேர்தல் அல்ல என்றும் ஹம்பாந்தோட்டை கூட்டுறவு ஆணையாளர் தெரிவித்தார்.
by Anonymous |
மார்ச் 24, 2025

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், கூட்டுறவுச் சங்க தேர்தல்கள் நடத்தக் கூடாது என தேர்தல்கள் ஆணைகுழு அறிவித்த போதிலும், கடந்த மார்ச் 16 ஆம் திகதி வீரகெட்டிய கூட்டுறவுச் சங்கத்தின் தேர்தல் நடைபெற்றதாக அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆரச்சி கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற விவாதத்தின் போது குற்றம்சாற்றியுள்ளார்.
இதற்கு பதிலளித்த தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத், வீரகெட்டிய கூட்டுறவுச் சங்கத்தின் தேர்தல் 2024 டிசம்பர் 29 அன்று நடைபெற்றது என்றும், கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்றது அந்த கூட்டுறவு சங்கத்தின் மகா சபைக் கூட்டமே என தெரிவித்திருந்தார்.
இவ்வாறு இரு தரப்பினரும் வீரகெட்டிய கூட்டுறவுச் சங்கத்தின் தேர்தல் குறித்து இருவேறு கருத்துக்களை முன்வைத்துள்ள நிலையில்,factseeker இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்தது.
வீரகெட்டிய கூட்டுறவுச் சங்கத்தின் தேர்தல் குறித்து ஹம்பாந்தோட்டை கூட்டுறவு ஆணையாளரிடம் வினவிய போது, வீரகெட்டிய கூட்டுறவுச் சங்கத்தின் தேர்தல் 2024 டிசம்பர் 29 அன்று நடைபெற்றதாகவும் கடந்த மார்ச் 16 ஆம் திகதியன்று இடம்பெற்றது மகா சபைக் கூட்டமே, தேர்தல் அல்ல என்றும் தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், அனைத்து கூட்டுறவுச் சங்க தேர்தல்களும் ரத்துசெய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு நாடளாவிய ரீதியில் கூட்டுறவு ஆணையர்களுக்கு அறிவுறுத்தியது. எனினும், தேர்தல் நடைபெற்ற கூட்டுறவுச் சங்கங்களுக்கு மகா சபைக் கூட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது. இதற்கமைய, 2025 மார்ச் 10ஆம் திகதி, தென் மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர், ஹம்பாந்தோட்டை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளரிடம் மகா சபைக் கூட்டம் நடத்த அனுமதி கோரி கடிதம் அனுப்பியதோடு, 2025 மார்ச் 14ஆம் திகதி, ஹம்பாந்தோட்டை மாவட்ட தேர்தல் அலுவலகம் இதற்கான அனுமதியையும் வழங்கியது.
ஆகவே, 2025 மார்ச் 16 அன்று நடைபெற்றது வீரகெட்டிய கூட்டுறவுச் சங்கத்தின் மகா சபை கூட்டம் என்பதையும் மார்ச் 16 ஆம் திகதி வீரகெட்டிய கூட்டுறவுச் சங்கத்தின் தேர்தல் நடைபெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆரச்சி கூறியது உண்மைக்கு புறம்பானது என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகிறது.