உலகின் மிகப்பெரிய பலா பழம் என பகிரப்படும் AI காணொளி

Deepware இணையதளத்தின் மூலம் ஆராய்ந்ததில், இது 'AI காணொளி' என்பது தெரியவந்தது.
by Anonymous |
மார்ச் 21, 2025

“இலங்கை கேகாலை மாவட்டத்தில் பழுத்த உலகின் மிகப் பெரிய பலாப்பழம்” என்ற பதிவுடன் காணொளி ஒன்று சமூகவலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
இக் காணொளியை Google Lens மூலம் ஆராய்ந்ததில், இது சமூகவலைதளங்களில் பலரால் அதிகம் பகிரப்பட்டு வருவதை அறியமுடிந்தது. எனவே இக் காணொளி குறித்து FactSeeker ஆராய்ந்தது.
சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட அக் காணொளியை உன்னித்து அவதானித்ததில் சில தெளிவற்ற அசம்சங்களை அவதானிக்க முடிந்தது. உதாரணமாக இக் காணொளியில் உள்ள சூழலியல் அசம்சங்கள் மற்றும் காணொளியில் உள்ள நபர்களின் முகங்கள், அசைவுகள் தெளிவற்றதாக இருப்பதை அவதானிக்க முடிந்தது. இதனால் இக் காணொளி செயற்கை நுண்ணறிவை பயன்டுத்தி உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பதை யூகிக்க முடிந்தது.
மேலும், இக்காணொளி செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டவையா என Deepware இணையதளத்தின் மூலம் ஆராய்ந்ததில், இது ‘AI காணொளி‘ என்பது தெரியவந்தது.
ஆகவே, “இலங்கை கேகாலை மாவட்டத்தில் பழுத்த உலகின் மிகப் பெரிய பலாப்பழம்” என்ற பதிவுடன் சமூகவலைதளங்களில் பகிரப்படுகின்ற காணொளி செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளி என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.