Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #false

உயிர் நீத்த தமிழ் போராளிகளுக்கு திசைகாட்டியின் கீழ் நியாயம் கிடைக்குமென போலிச்செய்தி

False
False

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்ததாக பகிரப்படும் செய்தியில் எந்தவித உண்மைத்தன்மையும் இல்லை

by Anonymous |

ஏப்ரல் 16, 2024

இம்மாதம் (ஏப்ரல் 4ஆம் திகதி) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதித்துறை மன்றத்தின் யாழ் மாவட்ட மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் பங்குபற்றியிருந்தமை தொடர்பில் சமூக வலைதளங்களிலும், பிரதான ஊடகங்களிலும் பல்வேறு செய்திகள் பகிரப்பட்டு வருவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

இதில், “உயிர் நீத்த தமிழ் போராளிகளுக்கு திசைகாட்டி ஆட்சியின் கீழ் நியாயம் பெற்றுக்கொடுக்கப்படும் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டமைக்கு அமையவே யாழ் மாநாட்டிற்கு சென்றேன்”,என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்ததாக செய்தியொன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதையும்,

அதேபோல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதித்துறை மன்றத்தின் யாழ் மாவட்ட மாநாட்டில் அழையாவிருந்தாளியாகவே கலந்துகொண்டதாக மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளதாக செய்திகள் யாழில் வெளியாகும் தமிழ் ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தமையும் அவதானிக்க முடிந்தது.

இவ்வாறு பகிரப்படும் இவ்விரு செய்திகளின் உண்மைத்தன்மையை factseeker ஆராய்ந்து பார்த்தது.

இதில், உயிர் நீத்த தமிழ் போராளிகளுக்கு திசைகாட்டி ஆட்சியின் கீழ் நியாயம் பெற்றுக்கொடுக்கப்படும் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டமைக்கு அமையவே யாழ் மாநாட்டிற்கு சென்றதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்ததாக கூறும் செய்தியில் எந்த உண்மைத்தன்மையும் இல்லை எனவும், தேசிய மக்கள் சக்தி எந்தவொரு அரசியல்வாதியுடனோ அல்லது அரசியல் கட்சியுடனோ அவ்வாறான இணக்கப்பாட்டிற்கு வரவில்லை எனவும், எந்தவித வாக்குறுதிகளும் அவ்வாறு வழங்கப்படவில்லை எனவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக மற்றும் ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா ஆகியோரு தெரிவித்தனர்.

அதேபோல், தேசிய மக்கள் சக்தியின் கூட்டத்திற்கு அநுரகுமார திசாநாயக அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் தான் அக்கூட்டத்தில் கலந்துகொள்ள தயாராக இல்லை என தெரிவித்திருந்ததாகவும், கூட்டம் முடிந்தவுடன் சந்திக்க வருவதாகவும் தெரிவித்துள்ள சுமந்திரன் எம்.பி, கூட்டம் நிறைவடையும் என கூறப்பட்ட நேரத்தில் அங்கு சென்ற போதிலும் நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்த காரணத்தினால் காத்திருந்து சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஆகவே உயிர் நீத்த தமிழ் போராளிகளுக்கு திசைகாட்டி ஆட்சியின் கீழ் நியாயம் பெற்றுக்கொடுக்கப்படும் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டமைக்கு அமையவே யாழ் மாநாட்டிற்கு சென்றதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்ததாக பகிரப்படும் செய்தியில் எந்தவித உண்மைத்தன்மையும் இல்லை என factseeker உறுதிப்படுத்துகின்றது.

மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதித்துறை மன்றத்தின் யாழ் மாவட்ட மாநாட்டில் அழையாவிருந்தாளியாகவே கலந்துகொண்டதாக மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ள போதிலும் அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் மறுத்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதித்துறை மன்றத்தின் யாழ் மாவட்ட மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக மூன்று தடவைகள் தொலைபேசியில் தொடர்புகொண்டு தன்னை நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்ததாக சுமந்திரன் எம்.பி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயகவிடம் factseeker வினவியபோது, தமது அழைப்பின் பேரிலேயே சுமந்திரன் அன்றைய கூட்டத்திற்கு வருகை தந்ததாக உறுதிப்படுத்தினார். மேலும், மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் இந்த விடயத்தை அறிந்திருக்காது அவ்வாறு ஒரு தவறான தகவலை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியினர் factseeker இடம் தெரிவித்தனர்.

Latest updates

#false

இந்தோனேசிய வெள்ளம் எனப் பகிரப்படும் AI காணொளி

பிப்ரவரி 13, 2026

#FAKE

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேயிலை கொழுந்து பறிக்கும் கூடையைச் சுமந்து செல்வது போன்ற புகைப்படம் போலியானது

பிப்ரவரி 12, 2026

#AI generated

பாலம் இடிந்து விழுந்ததாக பகிரப்படும் AI காணொளி : Grok AI-இன் பதில்களிலும் தவறு

பிப்ரவரி 9, 2026

#false

சனூஸ் எம்.பெரோஸ் அவர்கள் 2022 இல் காலமானார் : இன்றென பகிரப்படும் தவறான செய்திகள்

பிப்ரவரி 3, 2026

Related Content

இந்தோனேசிய வெள்ளம் எனப் பகிரப்படும் AI காணொளி

பிப்ரவரி 13, 2026

சனூஸ் எம்.பெரோஸ் அவர்கள் 2022 இல் காலமானார் : இன்றென பகிரப்படும் தவறான செய்திகள்

பிப்ரவரி 3, 2026

நடிகர் ரஜித ஹிரான் கெஸ்பேவ தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்படவில்லை

பிப்ரவரி 1, 2026

வைரளாக பகிரப்படும் ஜனாதிபதியின் AI புகைப்படம்

ஜனவரி 26, 2026

மௌபிமவின் பக்க வடிவமைப்பில் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தொடர்பில் போலிச்செய்தி

ஜனவரி 12, 2026

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection