‘உக்ரேனிய களியாட்டங்கள்’ என தவறாக பகிரப்படும் வீடியோக்கள்
இத்தாலியில் இடம்பெற்ற இந்த வீடியோக்கள் “t.me/RadioGenova_mv” என்ற டெலிகிராம் (telegram)பக்கத்தில் பதிவேற்றப்படிருந்தமையும் factseekerஇனால் கண்டறியப்பட்டது.
by Anonymous |
ஆகஸ்ட் 17, 2023
“உக்ரேனுக்கு அதிக பணம் அனுப்புங்கள், அவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்!” (SEND MORE MONEY to Ukraine, they’re really suffering!) என பதிவிடப்பட்ட வீடியோ காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை factseekerஇனால் அவதானிக்க முடிந்தது.
உக்ரேனில் போர் இடம்பெற்று வருகின்ற தற்போதைய சூழ்நிலையில், அங்குள்ள மக்கள் விநோதமாக களியாட்டங்களில் ஈடுபடுவதாகவும், அவர்களுக்கு நாட்டில் இடம்பெறும் போர் குறித்த உணர்வு இல்லையெனவும் விமர்சித்து பதிவுகள் இதன்போது பகிரப்பட்டு வருவதையும் சமூக வலைத்தளங்களில் அவதானிக்க முடிந்தது.
உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பின்னர் முதல் முறையாக மீண்டும் திறக்கப்பட்டதாகக் கூறப்படும் உக்ரேனிய நகரமான ஒடேசாவிற்கு அருகிலுள்ள கருங்கடலில் இவ்வாறு களியாட்டங்களில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படும் வீடியோக்களும், ஒடேசாவில் உள்ள இபிசா பீச் கிளப்பில் களியாட்டங்களில் ஈடுபடுவது போன்ற மக்கள் கூட்டத்தைக் காட்டும் மற்றொரு வீடியோவும் அதிகளவில் ட்விட்டர், முகநூல் மற்றும் வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமையும் அவதானிக்க முடிகின்றது.
எனினும் இபிசா பீச் கிளப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள படங்கள் மற்றும் வீடியோக்களை ஒத்திருக்கிறது போதிலும், இந்த வீடியோ உண்மையில் எப்போது படமாக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை. இந்த கிளப்பின் முகநூல் (FACEBOOK)பக்கம் 2018 முதல் புதுப்பிக்கப்படவில்லை என்பதுடன் ( https://ibiza.ua/en/#evnt ), கடந்த 2021 ஜூலை முதல் அதன் YouTube பக்கத்திலும் ( https://www.youtube.com/channel/UCJWgCDEFsNczoQ-L3NDbulA ) வீடியோக்கள் எதுவும் இடுகையிடப்படவில்லை என்பதையும் அவதானிக்க முடிந்தது.
அத்துடன் மேலும் சில வீடியோக்கள் இதனுடன் இணைக்கப்பட்டுள்ள போதிலும் அவற்றில் சில வீடியோக்கள் ஜெர்மனியின் பெர்லின் நகரத்தில் உள்ள ஸ்ட்ராண்ட்பாட் ப்ளாட்ஸென்சீ(Strandbad Plötzensee) என்ற ஏரியில் இடம்பெற்ற நிகழ்வுகள் என்பதையும் இணைய உதவியுடன் factseekerஇனால் கண்டறிய முடிந்தது. அத்துடன் SEND MORE MONEY to Ukraine, they’re really suffering! என தலைப்பிடப்பட்ட வீடியோவானது இத்தாலியில் ஒரு களியாட்ட நிகழ்வின் போது படமாக்கப்பட்டுள்ளது என்பதை அவதானிக்க முடிந்தது.
இத்தாலியில் இடம்பெற்ற இந்த வீடியோக்கள் “t.me/RadioGenova_mv” என்ற டெலிகிராம் (telegram)பக்கத்தில் பதிவேற்றப்படிருந்தமையும் factseekerஇனால் கண்டறியப்பட்டது.