இலங்கை மத்திய வங்கியில் பகுதி நேர வேலை வாய்ப்புகள் என பகிரப்படும் போலிச்செய்தி

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்த அறிவிப்ப்பில் "இலங்கை மத்திய வங்கியில் பகுதி நேர வேலை வாய்ப்புகள் இருப்பதாக பகிரப்படும் பதிவுகள் முற்றிலும் உண்மையற்றவை" என குறிப்பிடபட்டிருந்தது.
by Anonymous |
பிப்ரவரி 13, 2025

இலங்கை மத்திய வங்கியில் பகுதி நேர வேலை வாய்ப்புகள் இருப்பதாக பதிவுகள் சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
இப் பதிவுகள் அதிக பயனர்களிடம் சென்றடைவதால் FactSeeker இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்தது.
அப் பதிவுகளில் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ இலச்சினை பயன்படுத்தப்பட்டிருந்ததுடன், நபர்கள் வீட்டில் இருந்து பணிபுரியலாம் என்றும் நாளாந்தம் ரூ.15,000 தொடக்கம் ரூ.30,000 வரை சம்பளம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் குறிப்பிடபட்டிருந்தது.
இது தொடர்பில் மேலும் ஆராய்ந்த போது, இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் இது குறித்து வெளியிட்டிருந்த அறிவிப்பொன்றை அவதானிக்க முடிந்தது. அவ்வறிவிப்பில், “இலங்கை மத்திய வங்கியில் பகுதி நேர வேலை வாய்ப்புகள் இருப்பதாக பதிவுகள் பகிரப்படுவதாகவும் அவை முற்றிலும் உண்மையற்றவை” என்றும் குறிப்ப்பிடப்பட்டிருந்தது.
https://www.facebook.com/share/p/1BxGJmhxnh/
மத்திய வங்கியின் வேலை வாய்ப்பு தகவல்கள் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும்.
ஆகவே, இலங்கை மத்திய வங்கியில் பகுதி நேர வேலை வாய்ப்புகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவுகள் போலியானவை என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.