இலங்கை மத்திய வங்கியினால் 10,000 ரூபாய் நாணயத்தாள் அச்சடிக்கப்பட்டதா?
10000 ரூபா நாணயத்தாள் அச்சிடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பதிவொன்று பகிரப்பட்டு வருகின்றது
by Anonymous |
நவம்பர் 20, 2023
அரச ஊழியர்களின் சம்பளத்தை 10000 ரூபாவினால் அதிகரிப்பதாக வரவு செலவுத் திட்ட பிரேரணையில் தெரிவிக்கப்பட்ட பின்னர் 10000 ரூபா நாணயத்தாள் அச்சிடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பதிவொன்று பகிரப்பட்டு வருகின்றது. 20 ரூபாய் நாணயத்தாளில் மாறுபாடுகளுடன் 10,000 ரூபாய் நாணயத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், முன்புறத்தில் காகம் மற்றும் வண்ணத்துப்பூச்சி படங்கள் உள்ளன.
இவ்வாறான 10000 ரூபாய் நாணயத்தாள் அச்சடிக்கப்பட்டதா? சமூக ஊடகங்களில் பகிரப்படும் இந்த பதிவின் உண்மைத்தன்மை என்ன? என்பது தொடர்பில் Factseeker இலங்கை மத்திய வங்கியிடம் வினவியபோது, இதுவரையில் 10,000 ரூபா நாணயத்தாள் அச்சிடப்படவில்லை எனவும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவரும் நாணயத்தாள் போலியானது எனவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் இவ்வாறான போலி நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டதாகவும், போலியாக தயாரிக்கப்பட்ட நாணயத்தாள்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதாகவும் தெரிவிக்கு இலங்கை மத்திய வங்கி, இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டியது அவசியம் எனவும், அதற்காக மத்திய வங்கி மூன்று முறைமைகளை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அவையாவன, சரிபார்த்தல் – தடுத்தல் – தெரியப்படுத்துதல்
உங்கள் நாணயத்தாளை அடையாளம் கண்டுகொள்ளுங்கள்
நாணயத்தாள்கள் குறித்து பொதுமக்களின் நம்பிக்கையைப் பேணுவது இலங்கை மத்திய வங்கியின் பிரதான பொறுப்பாகும். இதன்படி, இலங்கை மத்திய வங்கியின் நாணயத் திணைக்களம் கடந்த சில வருடங்களில் போலி நாணயத் தாள்களின் பரவலை தடுப்பதற்காக நாணயத் தாள்களில் சேர்க்கப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தியுள்ளது.
நாணயத்தாள்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திருக்க வேண்டும். நீங்கள் நாணயத்தாள்கள் பற்றி அறிந்திருந்தால், போலி நாணயத்தாள்களை அடையாளம் கண்டுகொள்வது உங்களை இழப்பிலிருந்து காப்பாற்றும்.
சந்தேகத்திற்கிடமான நாணயத்தாள்களை கையாளுதல்
போலியானது நாணயங்களை உருவாக்குதல், 2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும் குற்றவியல் சட்டத்தின் 478 ஏ-டியின் கீழ் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் குற்றமாகும்.
பணப் பரிவர்த்தனையின் போது சந்தேகத்திற்குரிய போலி நாணயத்தாள்களை கண்டால் என்ன செய்வது
1. சந்தேகத்திற்குரிய போலி நாணயத்தாள்களை, உண்மையானது என்று தெரிந்த நாணயத்தாள்களுடன் ஒப்பிடுப்பாருங்கள்.
– மேலும் பாதுகாப்பு அறிகுறிகளை கவனமாக சரிபார்க்கவும்.
– போலி நாணயத்தாள் என்று நீங்கள் சந்தேகிக்கும் குறிப்பை வைத்திருங்கள்.
2. போலி நாணயத்தாளைக் கொண்டு வந்த நபர்(கள்) பற்றிய விவரங்களைக் குறித்துக்கொள்ளவும்.
– தோற்றம்
– வாகனம் பற்றிய தகவல்
– அந்த நபர் கடைசியாக எங்கே காணப்பட்டார் என்ற தகவல்கள்.
3. நாணயத்தாள் குறித்த விவரங்களைக் கவனியுங்கள்.
– மதிப்பு
– தொடர் எண்
4. அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவும்.
– உடனடியாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் போலி நாணயத்தாள் குறித்த பிரிவு அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு 0112422176 அல்லது 0112326670 என்ற இலக்கத்திற்கு அழைத்து அவர்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்.
போலி நாணயத்தாள்களினால் ஏற்படும் விளைவு
அதிக மதிப்புள்ள நாணயங்களையே போலியான நாணயங்களாக தயாரிக்கப்படும். இது பணமோசடி மற்றும் பொருளாதார தவறான செயல்களுக்கு பயன்படுத்தப்படுகின்றது. ஆனால், பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இந்த குற்றங்களை திறம்பட தடுக்க முடியும்.