Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #false

இலங்கையில் மோசமான கொவிட் வைரஸ் பரவுவதாக பகிரப்படும் போலிச்செய்தி

False
False

சுகாதார அமைச்சினாலோ அல்லது தொற்றுநோயியல் பிரிவினாலோ இவ்வாறான புதிய வைரஸ் பரவுவதாக எந்தவித அறிவிப்புகளையும் விடுக்கவில்லை

by Anonymous |

மே 21, 2025

கொவிட் 19 வைரஸ் தொற்றின் JN.1 எனும் புதிய பிறழ்வு எனப் பெயரிடப்பட்ட வைரஸ் தெற்காசிய நாடுகளில் வேகமாக பரவி வருவதாக தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்களில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

இந்நிலையில் இந்த வைரஸ் இலங்கையிலும் பரவியுள்ளதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்திகளையும் factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

எனினும் பிரதான ஊடகங்களிலோ அல்லது சுகாதார அமைச்சினாலோ இவ்வாறான பரவல்கள் ஏற்பட்டுள்ளதாக எந்தவித அறிவிப்புகளையும் அவதானிக்க முடியவில்லை. எனவே இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்க்க factseeker தீர்மானித்தது.

இது குறித்து சுகாதார கல்வி பணியகத்தின் பணிப்பாளரான வைத்தியர் ரஞ்சித் படுவன்துடாவவிடம் வினவியபோது, ​​இந்த நாட்களில் டெங்கு, சிக்குன்குனியா, இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொவிட் தொற்றுகள் பரவி வருவதாக தெரிவித்ததுடன், தொற்றுநோய் பரவல் காலப்பகுதியில் இருந்த ஒரு நோய் மீண்டும் ஒரு புதிய நோயாக அடையாளம் காணப்பட மாட்டாது எனவும், கொவிட் தொற்றுக்காலத்தில் கடைசியாக அடையாளம் காணப்பட்ட பிறழ்வு இன்னும் சமூகத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இலங்கையில் மோசமான கொவிட் வைரஸ் இருப்பதாகக் கூறி பகிரப்படும் இந்தப் பதிவின் மூலத்தை ஆராயும்போது, ​​அதன் உள்ளடக்கத்தில் இந்திய வைத்தியரான ரித்தேஷ் குமார் என்பவர் வெளியிட்ட அறிக்கையை அடிப்படையாக வைத்தே இந்த செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையின் மூலத்தை ஆராய்ந்தபோது Dr.Ritesh kumar , Pulmonologist எனும் facebook கணக்கின் ஊடாக கடந்த 2021.03.30 அன்று பதிவிடப்பட்டுள்ளது என்பதை அவதானிக்க முடிந்தது.

அதே செய்தி பகிரப்பட்ட பிற இடுகைகளையும் சமூக வலைதளங்களில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

இந்தச் செய்தியின் சிங்கள மொழிபெயர்ப்பே தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. ஆகவே இந்த செய்தி அண்மையில் வெளியிடப்பட்ட ஒன்றல்ல என்பது உறுதியாகின்றது.

இது தொடர்பாக தொற்றுநோயியல் பிரிவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இலங்கையில் தற்போது கொவிட் புதிய பிறழ்வு எதுவும் அடையாளம் காணப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முடிந்தது.

ஆகவே இலங்கையில் மோசமான கொவிட் வைரஸ் பரவுவதாகக் கூறி பகிரப்படும் இந்த செய்தியில் உண்மை இல்லை என்பதையும் இவ்வாறு பகிரப்படும் செய்தியானது பழைய செய்தி ஒன்றினை மூலமாகக் கொண்டது என்பதையும் factseeker உறுதிப்படுத்துகின்றது.

Latest updates

#false

இந்தோனேசிய வெள்ளம் எனப் பகிரப்படும் AI காணொளி

பிப்ரவரி 13, 2026

#FAKE

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேயிலை கொழுந்து பறிக்கும் கூடையைச் சுமந்து செல்வது போன்ற புகைப்படம் போலியானது

பிப்ரவரி 12, 2026

#AI generated

பாலம் இடிந்து விழுந்ததாக பகிரப்படும் AI காணொளி : Grok AI-இன் பதில்களிலும் தவறு

பிப்ரவரி 9, 2026

#false

சனூஸ் எம்.பெரோஸ் அவர்கள் 2022 இல் காலமானார் : இன்றென பகிரப்படும் தவறான செய்திகள்

பிப்ரவரி 3, 2026

Related Content

இந்தோனேசிய வெள்ளம் எனப் பகிரப்படும் AI காணொளி

பிப்ரவரி 13, 2026

சனூஸ் எம்.பெரோஸ் அவர்கள் 2022 இல் காலமானார் : இன்றென பகிரப்படும் தவறான செய்திகள்

பிப்ரவரி 3, 2026

நடிகர் ரஜித ஹிரான் கெஸ்பேவ தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்படவில்லை

பிப்ரவரி 1, 2026

வைரளாக பகிரப்படும் ஜனாதிபதியின் AI புகைப்படம்

ஜனவரி 26, 2026

மௌபிமவின் பக்க வடிவமைப்பில் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தொடர்பில் போலிச்செய்தி

ஜனவரி 12, 2026

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection