இது வீடியோ கேமிற்காக உருவாக்கப்பட்ட காணொளியாகும்

இந்தக் காணொளியானது, X-Plane Flight Simulator எனும் வீடியோ கேமிற்காக உருவாக்கப்பட்ட அனிமேசன் காணொளியாகும்
by Anonymous |
பிப்ரவரி 7, 2024

“திடீரென நுழைந்த விமானம் எப்படியோ விபத்துக்கள் தவிர்க்கப்பட்டது” என குறிப்பிட்டு காணொளியொன்று எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
குறித்த காணொளியின் உண்மைத்தன்மையை அறியத்தருமாறு factseekerஇடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த காணொளியின் உண்மைத்தன்மை குறித்து factseeker ஆராய்ந்து பார்த்ததில் இது விடியோ கேம் ஒன்றுக்காக உருவாக்கப்பட்ட போலியான காணொளி என்பதை கண்டறிய முடிந்தது.
இந்தக் காணொளியானது, X-Plane Flight Simulator எனும் வீடியோ கேமிற்காக உருவாக்கப்பட்ட அனிமேசன் காணொளியாகும். இந்த விடியோ கேமிற்காக உருவாக்கப்பட்ட காணொளியின் லிங்க் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
https://www.youtube.com/watch?v=bBWha3RAo6E
ஆகவே, குறித்த காணொளி உண்மையான காணொளி அல்ல என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.