அரசியலமைப்புப் பேரவையின் செயலாளர் பதவியில் இருந்து தம்மிக்க தசநாயக்கவே இராஜினாமா செய்தார்

அரசியலமைப்பு பேரவையின் செயலாளராக கடமையாற்றிய முன்னாள் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் என்பதே உண்மையான செய்தியாகும்.
by Anonymous |
மே 14, 2025

“அரசியலமைப்புப் பேரவையின் செயலாளராகப் பணியாற்றிய தம்ம திசாநாயக்க, அப் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்” என்ற செய்தியொன்றை, தம்ம திசாநாயக்கவின் புகைப்படத்துடன்,கடந்த 10 ஆம் திகதி ‘திவயின’ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் அரசியலமைப்பு பேரவையின் செயலாளராக கடமையாற்றிய முன்னாள் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் என்று பல பிரதான ஊடகங்கள் 2025-05-10 அன்று செய்திகளை வெளியிட்டிருந்தன. அந்தச் செய்தி இங்கே,
இந்நிலையில், ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் ஆய்வுகள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மஞ்சுள கஜநாயக்க தனது facebook பக்கத்தில் இட்டுள்ள ஒரு பதிவில் இந்தச் செய்தியைக் கேள்வி எழுப்பியதையும் factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
மஞ்சுள கஜநாயக்க தனது பதிவோடு செய்தியின் screenshot ஒன்றையும் பதிவிட்டிருந்தார்,
ஆகவே இது குறித்து ஆராய்ந்த factseeker, திவயின இணையதளத்தில் இதுபோன்ற ஒரு செய்தி வெளியிடப்பட்டிருப்பதைக் காண முடிந்தது, எனினும் அது இப்போது வலைத்தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
எனினும், திவயின இணையதளம் 12.05.2025 அன்று திருத்தத்துடன் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அதில் 10-05-2025 அன்று வெளியிடப்பட்ட செய்தியில், அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவின் பெயருக்குப் பதிலாக தம்ம திசாநாயக்க என்ற பெயர் எழுதப்பட்டிருப்பதையும், அது திருத்தப்பட்டுள்ளது என்பதையும் குறித்த இணையதளம் தெளிவுபடுத்தியுள்ளது.
ஆகவே, அரசியலமைப்பு பேரவையின் செயலாளராக கடமையாற்றிய முன்னாள் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் என்பதே உண்மையான செய்தி என்பதையும் திவயின செய்தித்தாள் வெளியிட்டுள்ள செய்தி தவறானது என்பதையும் factseeker உறுதிப்படுத்துகின்றது.