Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #factual

அரசாங்கத்தின் “பிணை இல்லாத கடன்கள்” வழங்கப்படுவதாகக் கூறப்படும் கதையில் உண்மை என்ன?

கடந்த ஜூன் 30 ஆம் திகதி நிலவரப்படி, ரூ. 1,000 மில்லியனுக்கும் அதிகமான கடன்களுக்கு உத்தரவாதங்கள் வழங்கப்பட்டுள்ளது.

by Anonymous |

ஜூலை 15, 2025

“பிணை இல்லாமல் கடன்கள் வழங்கப்படுகின்றன,நீங்களும் அருகிலுள்ள வங்கிக்குச் செல்லுங்கள்-அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு ” என்ற தலைப்புடன் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட ஒரு காணொளி FactSeeker இனால் அவதானிக்கப்பட்டது.

தேசிய ரூபவாகினி தொலைக்காட்சியில் ‘கரட்ட கர’ அரசியல் விவாத நிகழ்ச்சியின் போது, தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் கௌசல்யா ஆரியரத்ன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் (SPP) நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோருக்கு இடையே இடம்பெற்ற கருத்துப் பரிமாற்றமாகவே இந்த காணொளி பதிவாகியுள்ள நிலையில், தேசிய ரூபவாகினி தொலைக்காட்சியில் இடம்பெற்ற ஒளிபரப்பை ஆராய்ந்த பின்னர், சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளி உண்மையானது என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

காணொளி இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட காணொளியில் கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்த கருத்தானது,

“2020 முதல் 2023 ஆம் ஆண்டு இறுதி வரை, இலங்கையில் 25,000 க்கும் மேற்பட்ட சிறு மற்றும் நடுத்தர வர்த்தகங்கள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிணையமில்லாத கடன்கள் வழங்குவதாக வாக்குறுதி வழங்கியிருந்தோம். அதற்கமைய கடந்த எட்டு மாதங்களில் இதுவரை இரண்டு திட்டங்களைத் தொடங்கியுள்ளோம்.

ஒன்று, தொழில் அமைச்சகத்தின் கீழ் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு 5%, 2%, 8% என்ற குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை வழங்கும் திட்டம்.அடுத்தது தேசிய கடன் உத்தரவாத நிறுவனங்கள் என்பதை நிறுவி பிணையமின்றி கடன்களை வழங்கத் தொடங்கியுள்ளோம். அதன் மூலமாக கடன்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.”

மேலும் கருத்து தெரிவித்த அவர், ” இந்த திட்டத்தின் கீழ் அரச வங்கிகள் உட்பட சுமார் பத்து பெரிய வங்கிகள் பிணையமில்லாத கடன்களை வழங்க ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகவும், இது செய்தித்தாள் விளம்பரங்கள் மூலமாகவும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது” எனவும் அவர் கூறினார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க, பிணையமில்லாத கடன்களை வழங்கும் நிறுவனத்தை நிறுவுவது குறித்து வெளிப்படுத்திய கருத்துக்கள் இங்கே.

https://www.facebook.com/share/v/1CEryQUifj/

இது தொடர்பாக தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்புகள் தொடர்பான தகவல்களை FactSeeker ஆராய்ந்தது. அதன்போது 5%, 2%, 8% வட்டி விகிதங்களில் வழங்கப்படும் கடன்கள் குறித்து தொழில்த அமைச்சகம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளதை அவதானிக்க முடிந்தது.

அறிவிப்பு :-

இது SMILE III – RF மற்றும் E-Friends II – RF ஆகிய இரண்டு கடன் திட்டங்களின் கீழ், தொழில் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்ட திட்ட முகாமைத்துவ பிரிவால் பங்கேற்பு கடன் நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இது பற்றிய கூடுதல் தகவல்களை கீழே உள்ள இணைப்பைப் பார்வையிடுவதன் மூலம் பெறலாம்.
https://www.industry.gov.lk/web/project-management-unit/

அதற்கமைய , கைத்தொழில் அமைச்சின் கீழ் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஆதரிப்பதற்காக 5%, 2% மற்றும் 8% குறைந்த வட்டி விகிதங்களில் கடன்கள் வழங்கப்படுவதாக கௌசல்யா ஆரியரத்ன கூறியது உண்மை என்பதை factseeker உறுதிப்படுத்துகிறது.

எனினும், பணையமின்றி கடன்களை வழங்குவதற்காக நிறுவப்பட்டதாகக் கூறப்படும் நிறுவனம் தொடர்பான உண்மைகளை FactSeeker ஆராய்ந்தது.

“தேசிய கடன் உத்தரவாத நிறுவனங்கள் (National Credit Guarantee Institution Limited) ” என்ற பெயரில் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், தொழில்முனைவோருக்கு பிணையம் இல்லாமல் வணிகக் கடன்களைப் பெறுவதற்கான வசதியை வழங்கும் என்று தேசிய நிறுவன மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட அறிவிப்பை ஆராய்ந்தோம்.

இது தொடர்பாக தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையை இங்கே காணலாம்.
https://www.facebook.com/share/1FBfpupyik/

தேசிய கடன் உத்தரவாத நிறுவனம் ஜூன் 2, 2025 அன்று உத்தியோகபூர்வமாக அதன் செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த நிறுவனம், இலங்கை அரசு மற்றும் 13 நிதி நிறுவனங்களுடன் இணைந்து நிறுவப்பட்டுள்ளது. இந்த நிதி நிறுவனங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. பட்டியலில் இரண்டு சிறப்பு வங்கிகள், எட்டு வணிக வங்கிகள் மற்றும் மூன்று உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள் அடங்கும்.

1. இலங்கை வங்கி
2. மக்கள் வங்கி
3. கொமர்ஷல் வங்கி
4. சம்பத் வங்கி
5. ஹட்டன் நஷனல் வங்கி
6. நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி
7. செலான் வங்கி
8. என்டிபி வங்கி
9. சனச மேம்பாட்டு வங்கி
10. பிராந்திய மேம்பாட்டு வங்கி
11. எல்பி பினான்ஸ்
12. சென்ட்ரல் பினான்ஸ்
13. CDB

தேசிய கடன் உத்தரவாத நிறுவனத்தின் (NCGIL) கடன் உத்தரவாத வசதியின் கீழ், கூட்டாளர் நிதி நிறுவனங்கள் மூலம், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) ரூ. 5 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரையிலான கடன்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இருப்பினும், NCGIL நேரடியாக கடன்களை வழங்குவதில்லை. கூட்டாளர் நிதி நிறுவனங்களால் தொழில்முனைவோருக்கு நிதி வழங்கப்படுகிறது. ஆபத்தைத் தணிக்க நிவாரணமாக NCGIL நிதி நிறுவனங்களுக்கு பிணையப் பாதுகாப்பை மட்டுமே வழங்குகிறது.

இணை நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் கடன்களில் 67% (2/3) மட்டுமே தேசிய கடன் உத்தரவாத நிறுவனம் பாதுகாப்பை வழங்குகிறது.

தேசிய கடன் உத்தரவாத நிறுவனத்தால் வழங்கப்படும் பாதுகாப்பு எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது என்பதை கீழே உள்ள வரைபடம் காட்டுகிறது.

இதுவரை வழங்கப்பட்ட உத்தரவாதங்கள் தொடர்பாக தேசிய கடன் உத்தரவாத நிறுவனத்தை factseeker தொடர்புகொண்டு வினவியபோது, அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஜூட் டி. பெரேரா, கடந்த ஜூன் 30 ஆம் திகதி நிலவரப்படி, ரூ. 1,000 மில்லியனுக்கும் அதிகமான கடன்களுக்கு உத்தரவாதங்கள் வழங்கப்பட்டதாகக் கூறினார். NCGIL எந்த வகையிலும் நேரடியாக கடன்களை வழங்குவதில்லை என்பதை அவர் வலியுறுத்தினார். ஜூன் 30 ஆம் திகதி நிலவரப்படி, இணை நிதி நிறுவனங்கள் மூலம் 200 க்கும் மேற்பட்ட தொழில்முனைவோருக்கு NCGIL இந்த வசதியை வழங்கியுள்ளது.

அதன்படி, “தேசிய கடன் உத்தரவாத நிறுவனம் ” நிறுவப்பட்டு பிணையமில்லாத கடன்களை வழங்கத் தொடங்கியுள்ளது என்றும், கடன்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கௌசல்யா ஆரியரத்ன கூறிய விடயம் உண்மைக்கு மாறானது.

ஆகவே, சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளியில் நாடாளுமன்ற உறுப்பினர் கௌசல்யா ஆரியரத்ன கூறியது கருத்துக்களில் பாதி விடயங்கள் உண்மை என்பதயும் சில காரணிகள் தவறானவை என்பதையும் factseeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#Misleading

நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட குழந்தையின் புகைப்படம் என பகிரப்படும் காணொளி போலியானது

ஜூலை 23, 2025

#false

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

#explainer

வாயில் கண்களைக் கொண்ட தவளை பற்றிய உண்மை

ஜூலை 21, 2025

#TRUE

வரங்கனா கெகுலாவல லொத்தர் பரிசொன்றை வென்றார் என்ற செய்தி உண்மையே.

ஜூலை 8, 2025

Related Content

பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக தெரு நாய்களை அகற்றும் முடிவு எடுக்கப்பட்டமை உண்மையே

ஏப்ரல் 4, 2025

பாராளுமன்ற உறுப்பினர் டி.பி.சானக மூலமாக தவறாக சமூக மயப்படுதப்படும் கருத்து

மார்ச் 17, 2025

Dialog Asiata பொதிகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதா?

செப்டம்பர் 30, 2024

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection