அமைச்சர் டக்லஸ் தேவானந்தா காலமானதாக போலிச்செய்தி
திடீர் சுகவீனம் காரணமாக அமைச்சர் டக்லஸ் தேவானந்தா காலமானதாக tiktok தளத்தில் பகிரப்படும் செய்தி போலியானது
by Anonymous |
ஜனவரி 17, 2024
திடீர் சுகவீனம் காரணமாக அமைச்சர் டக்லஸ் தேவானந்தா காலமானதாக tiktok தளத்தில் செய்தியொன்று பகிரப்பட்டு வருவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது. எனினும் இவ்வாறு பகிரப்படும் செய்தி போலியானது என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.
10-11-1957 அன்று பிறந்த டக்லஸ் தேவானந்தா தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தில் மீன்பிடித்துறை அமைச்சராக செயற்பட்டு வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் டக்லஸ் தேவானந்தா நேற்று (16.01.2024) யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். அங்க ஊடக சந்திப்பு தொடர்பான காணொளி இங்கே இணைக்கப்பட்டுள்ளது.