அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறையென போலிச்செய்தி பகிரப்படுகின்றது
அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (22 ஆம் திகதி) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்திகள் உண்மைக்கு புறம்பானதென factseeker உறுதிப்படுத்துகின்றது.
by Anonymous |
மே 21, 2024
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (22 ஆம் திகதி) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
இது குறித்து ஆராய்ந்து பார்க்கும் வகையில் factseeker கல்வி அமைச்சிடம் வினவிய போது, கல்வி அமைச்சு அவ்வாறு எந்தவொரு அறிவிப்பையும் விடுக்கவில்லை எனவும், சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி பொய்யானது எனவும், பாடசாலைகளின் விடுமுறை குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்தது.
அதில், “நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (22 ஆம் திகதி) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என்பதுடன், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) நடத்தப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன், தற்போதுள்ள சூழ்நிலையின் அடிப்படையில் முடிவெடுக்கும் அதிகாரம் மாகாணக் கல்விச் செயலாளர்கள் மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கே உள்ளது என்பதையும் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி, அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (22 ஆம் திகதி) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்திகள் உண்மைக்கு புறம்பானதென factseeker உறுதிப்படுத்துகின்றது.