Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #false

அண்டர்டேக்கர் உயிரிழந்ததாக பகிரப்படும் போலிச்செய்தி

False
False

அண்டர்டேக்கர் உயிரிழந்ததாக நம்பகமான செய்திகள் எதுவும் ஊடகங்களில் வெளியாகவில்லை.

by Anonymous |

ஜூன் 23, 2025

அமெரிக்காவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மல்யுத்த வீரர்( American retired professional wrestler), ‘தி அண்டர்டேக்கர்’ என அழைக்கப்படும் மார்க் வில்லியம் கலோவே (Mark William Calaway) உயிரிழந்ததாகக் கூறும் புகைப்படப் பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.

“60 வயதான அண்டர்டேக்கரின் குடும்பம் அவரது ரசிகர்களுக்கு ஒரு துக்க செய்தியை அறிவித்தது” எனும் விளக்கத்துடன், மருத்துவமனையில் இருப்பதை போன்ற புகைப்படத்துடனேயே இந்த பதிவு பகிரப்பட்டு வருகிறது.

இதற்கு பலர் தமது இரங்கல் கருத்துக்களை பதிவிட்டு வருவதால் FactSeeker இதன் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்தது.

இந்த பதிவில் பயன்படுத்தப்பட்ட புகைப்படத்தை Google Lens மூலம் ஆராய்ந்ததில், இதே போன்ற பதிவுகள் பல இதற்கு முன்பும் சமூக வலை தளங்களில் பகிரப்பட்டுள்ளன என்பது தெரியவந்தது.

மேலும், அண்டர்டேக்கர் உயிரிழந்ததாக நம்பகமான செய்திகள் எதுவும் எந்தவொரு ஊடகங்களிலும் வெளியாகவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது. அவரது உத்தியோகப்பூர்வ சமூக வலைதளப்பக்கங்களிலும் இதுபோன்ற தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

அத்துடன், நேற்று (22) நடைபெற்ற Fanatics Fest நிகழ்வில் கலந்து கொண்டு ரசிகர்களை சந்தித்தபோது எடுக்கப்பட்ட காணொளியை அவர் தனது X பக்கத்தில் பதிவிட்டிருந்ததும் அவதானிக்க முடிந்தது.

https://x.com/undertaker/status/1936559314136703482

அதேபோன்று, SHAK Wrestling எனும் YouTube சேனலில் நேற்று வெளியிடப்பட்ட அண்டர்டேக்கரின் நேர்காணல் காணொளியும் காணக்கூடியதாக இருந்தது.

ஆகவே, அண்டர்டேக்கர் உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவுகள் உண்மைக்கு புறம்பானவை என்பதை FactSeeker உறுதிப்படுத்துகின்றது.

Latest updates

#false

மௌபிமவின் பக்க வடிவமைப்பில் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தொடர்பில் போலிச்செய்தி

ஜனவரி 12, 2026

#false

ஒரே ஓவரில் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தி உலகசாதனை என பகிரப்படும் தவறான காணொளி

ஜனவரி 7, 2026

#Misleading

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனின் மனவேதனை என பகிரப்படும் காணொளி ஒரு பாடசாலை நாடகமாகும்

டிசம்பர் 18, 2025

#Misleading

நிபந்தனையின் பெயரிலேயே  அஜித் நிவார்ட் கப்ரால் விடுதலை செய்யப்பட்டார்.

டிசம்பர் 12, 2025

Related Content

மௌபிமவின் பக்க வடிவமைப்பில் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தொடர்பில் போலிச்செய்தி

ஜனவரி 12, 2026

ஒரே ஓவரில் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தி உலகசாதனை என பகிரப்படும் தவறான காணொளி

ஜனவரி 7, 2026

விக்டோரியா, மொரகஹகந்த மற்றும் கொத்மலை நீர்த்தேக்கங்களில் அணைக்கட்டு உடையும் அபாயம் இருப்பதாக பகிரப்படும் போலிச்செய்திகள்

டிசம்பர் 1, 2025

ஜனாதிபதி அநுரவின் ஜெர்மனி விஜயம் தனிப்பட்ட விஜயமா ?

ஆகஸ்ட் 27, 2025

நீதிபதி நிலுபுலி லங்காபுர, தயா லங்காபுரவின் மகள் அல்ல.

ஆகஸ்ட் 25, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection