Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #FAKE

“ஃபேஸ்புக் அறிவிப்பு!” எனும் தலைப்பில் WhatsApp தளத்தில் பகிரப்படும் போலிச் செய்தி

False
False

இத்தகைய போலி அறிவிப்புகள் தொடர்பாக 'Meta' நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ உதவி மையத்தில் எச்சரிக்கைளை வெளியிட்டுள்ளது.

by Anonymous |

மே 19, 2025

“ஃபேஸ்புக் அறிவிப்பு!” என்ற தலைப்புடன் Whatsapp தளத்தில் பகிரப்பட்ட செய்தியொன்றை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது. இந்த செய்தி, பயனாளர்களின் Facebook கணக்குகள் முடக்கப்படலாம் என்ற எச்சரிக்கையை உள்ளடக்கியதோடு, கணக்கை உறுதிப்படுத்த இணையதள இணைப்பு ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.

அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
ஃபேஸ்புக் அறிவிப்பு!
உங்கள் FaceBook கணக்கு மற்றும் பக்கம் எங்கள் சமூக வழிகாட்டுதல்களை மீறுவதாக பல புகார்கள் எங்களுக்குக் கிடைத்துள்ளன. தயவுசெய்து எங்கள் விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் கொள்கைகளை மிக கவனமாக பரிசீலிக்கவும்.
எங்கள் பயனர்களின் பாதுகாப்பிற்காக, உங்கள் கணக்கு அடுத்த 24 மணி நேரத்தில் தானாகவே மற்றும் நிரந்தரமாக முடக்கப்படும்.
மேலே உள்ள தகவல்களில் ஏதேனும் தவறு இருப்பின், தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும். அப்போது, உங்கள் கணக்கைப் பயன்படுத்துவதை தொடரச் செய்ய நாங்கள் அதை மறுபரிசீலனை செய்ய முடியும்.
எங்களை தொடர்பு கொள்ள: Link 
இந்த அறிவிப்பைப் பெற்ற 24 மணி நேரத்திற்குள் உங்கள் தகவல்களை உறுதிப்படுத்த வேண்டும். உங்கள் பதில் கிடைக்கவில்லையெனில், உங்கள் கணக்கு நிரந்தரமாக முடக்கப்படும். இந்த முடிவு இறுதியானது மற்றும் மாற்ற முடியாதது. உங்கள் ஒத்துழைப்பிற்கும் புரிந்துகொள்ளவும் நன்றி.
உங்கள் கணக்கை உறுதிப்படுத்த இந்த தானியங்கி செய்தியை ஏற்கவும்.
– ஃபேஸ்புக் ஆதரவு குழு 

இச் செய்தியில் உள்ள இணையத்தள இணைப்பு (link) குறித்து FactSeeker ஆராய்ந்தபோது, அது bitly.li என்ற அடையாளத்தில் முடிவடைந்தது. இது Meta நிறுவனத்துடன் தொடர்புடைய அதிகாரபூர்வ இணையதள முகவரி அல்ல என்பதை அறியமுடிந்தது.

மேலும், இந்த இணைப்பை URLVoid மற்றும் Cifas போன்ற இணைய பாதுகாப்பு ஆய்வு தளங்கள் மூலம் ஆராய்ந்த போது, இது போலியான இணையதள இணைப்பு என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

மேலும், இச் செய்தியை அனுப்பிய Whatsapp இலக்கம் வியட்நாமைச் சேர்ந்தது என்பதையும் உறுதிபடுத்த முடிந்தது.

Meta நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ “Help Center” தளத்தின்படி, “தங்களது சமூக வழிகாட்டுதல்களை மீறியதாக கூறி, கணக்கு முடக்கப்படும்” என உள்ளடக்கிய இத்தகைய போலி அறிவிப்புகள் பற்றி அவர்கள் பலமுறை எச்சரித்துள்ளனர்.
(மேலும் விவரங்களுக்கு: Meta Help Center)

ஆகவே, “ஃபேஸ்புக் அறிவிப்பு!” என்ற தலைப்புடன் வாட்ஸ்அப்பில் பகிரப்படும் இந்த செய்தி முற்றிலும் போலியானது என்பதை FactSeeker உறுதிப்படுத்துவதோடு இத்தகைய செய்திகளின் மூலமாக தனிப்பட்ட தகவல்களை திரட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் அபாயம் உள்ளதால், தங்களது கணக்குகளை பாதுகாப்பாக வைத்திருக்க FactSeeker பரிந்துரைக்கிறது.

Latest updates

#Misleading

நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட குழந்தையின் புகைப்படம் என பகிரப்படும் காணொளி போலியானது

ஜூலை 23, 2025

#false

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

#explainer

வாயில் கண்களைக் கொண்ட தவளை பற்றிய உண்மை

ஜூலை 21, 2025

#factual

அரசாங்கத்தின் “பிணை இல்லாத கடன்கள்” வழங்கப்படுவதாகக் கூறப்படும் கதையில் உண்மை என்ன?

ஜூலை 15, 2025

Related Content

தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு செல்ல இலவச நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படுகிறதா?

ஜூன் 25, 2025

அமெரிக்காவின் B-2 விமானத்தை ஈரான் சுட்டுவீழ்த்தியதாக பகிரப்படும் போலிச்செய்தி

ஜூன் 23, 2025

TEMU இலவசமாக மின்னணு சாதனங்களை வழங்குவதாக பகிரப்படும் போலிச் செய்தி

ஜூன் 20, 2025

திமிங்கலத்தின் உயிரைக் காப்பாற்றுவதாகக் கூறப்படும் AI காணொளி

ஜூன் 20, 2025

சந்திரிக்கா நடனமாடுவதாக பகிரப்படும் AI காணொளி

ஜூன் 9, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection