Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #FAKE

நடிகர் விஜய்யின் படங்களை இலங்கையில் வெளியிட ஜனாதிபதி அநுர தடை விதிக்கவில்லை

False
False

விஜய் நடித்த படங்களை திரையிடுவது இலங்கையில் தடை செய்யப்படுவதாக எந்தவொரு அறிவிப்பும் ஜனாதிபதியினால் பிறப்பிக்கவில்லை என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவிப்பு.

by Anonymous |

ஆகஸ்ட் 28, 2025

இந்திய, தமிழக நடிகர் ஜோசப் விஜய் (தளபதி விஜய்) நடித்த படங்களை இலங்கையில் திரையிட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவரும் செய்தியை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

“தளபதி விஜய்யின் படங்கள் இலங்கையில் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது! ஜனாதிபதி அநுர உத்தரவு” என்று எழுதப்பட்ட இந்தப்பதிவை அவதானித்த போது , ​​அது www.Newsfirst.lk என்ற இணையதளத்தில் 25.08.2025 அன்று ‘சிரச நியூஸ் ஃபர்ஸ்டின்’ உத்தியோகபூர்வ அலைவரிசை சின்னத்துடன் வெளியிடப்பட்டிருப்பதைக் காண முடிந்தது.

செய்தி இங்கே உள்ளது: https://www.facebook.com/share/p/15Be2WfpmNi/?mibextid=wwXIfr

ஆகவே இதன் உண்மைத்தன்மை குறித்து factseeker ஆராயும் விதமாக சிரச அலைவரிசையின் உத்தியோகபூர்வ பக்கங்களில் ஆராய்ந்த போதும் அவ்வாறான எந்தவொரு செய்தியும் பிரசுரிக்கப்படவில்லை.

இது தொடர்பாக சிரச நியூஸ் ஃபர்ஸ்ட் செய்திப் பிரிவிடம் விசாரித்தபோது, ​​தமது அலைவரிசையிலோ, வலைத்தள பக்கத்திலோ அல்லது சமூக ஊடகப் பக்கத்திலோ இதுபோன்ற செய்தியை வெளியிடவில்லை என்பதை உறுதிப்படுத்தினர்.

மேலும், ஜோசப் விஜய் நடித்த படங்களை திரையிடுவது இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவிடம் விசாரித்தபோது, ஜனாதிபதியினால் அத்தகைய உத்தரவுகள் பிறப்பிக்கவில்லை என தெரிவித்தனர்.

ஆகவே, நடிகர் ஜோசப் விஜய் (தளபதி விஜய்) நடித்த படங்களை இலங்கையில் திரையிட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி போலியாக தயாரிக்கப்பட்ட ஒன்றாகும் என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.

Latest updates

#FAKE

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மூன்றாம் சார்லஸ் மன்னரைச் சந்தித்ததாகப் பரவும் போலி புகைப்படம்

பிப்ரவரி 28, 2026

#TRUE

இந்தியப் பயணிகளுக்கு இப்போது விசா மற்றும் ETA இன்றி இலங்கைக்கு வரலாம்

பிப்ரவரி 17, 2026

#Misleading

உயிரிழந்த அயூப்ராஜ் அருள் பயாஸின் வயது 17 : பொலிசாரின் அறிக்கையிலேயே தவறு ஏற்பட்டுள்ளது

பிப்ரவரி 16, 2026

#false

இந்தோனேசிய வெள்ளம் எனப் பகிரப்படும் AI காணொளி

பிப்ரவரி 13, 2026

Related Content

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மூன்றாம் சார்லஸ் மன்னரைச் சந்தித்ததாகப் பரவும் போலி புகைப்படம்

பிப்ரவரி 28, 2026

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேயிலை கொழுந்து பறிக்கும் கூடையைச் சுமந்து செல்வது போன்ற புகைப்படம் போலியானது

பிப்ரவரி 12, 2026

ஜெசிக்கா ராட்கிளிப் என்ற கடல் பயிற்சியாளரை ஒர்கா (Orca) திமிங்கலம் கொன்றதாக பகிரப்படும் AI காணொளி

ஆகஸ்ட் 14, 2025

ஊடகங்களை அச்சுறுத்தும் விதத்தில் சீன தூதரகம் அனுப்பியதாக பகிரப்படும் போலிக் கடிதம்

ஆகஸ்ட் 6, 2025

தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு செல்ல இலவச நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படுகிறதா?

ஜூன் 25, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection