Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #FAKE

அமெரிக்காவின் B-2 விமானத்தை ஈரான் சுட்டுவீழ்த்தியதாக பகிரப்படும் போலிச்செய்தி

False
False

அமெரிக்காவின் B-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்களில் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கும் புகைப்படம் AI மூலமாக உருவாக்கப்பட்ட புகைப்படமாகும்.

by Anonymous |

ஜூன் 23, 2025

ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி தளங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்திய அமெரிக்காவின் B-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்களில் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கும் புகைப்படமொன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்படுவதுடன் இது குறித்து சர்வதேச மட்டத்தில் பலர் தமது கருத்துக்களயும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த புகைப்படத்துடனான செய்தியின் உண்மைத்தன்மையை கண்டறியும் விதமாக factseeker இதனை ஆராய்ந்ததில் இந்த புகைப்படம் உண்மைக்கு புறம்பான பல விடயங்களை கொண்டுள்ளதை அவதானிக்க முடிந்தது. குறிப்பாக சுட்டு வீழ்த்தியதாக பகிரப்படும் விமானமும் – அமெரிக்காவின் B-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானமும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்த போதிலும் சில விடயங்கள் மாறுபட்டதாக காணப்படுகின்றன.

அதனை காட்டும் படம் இங்கே :


அதேபோல் மற்றைய படத்தில் விமானமானது விமானிகளை விட சிறிதாக இருப்பதையும் அவதானிக்க முடிந்தது, ஆகவே இவை AI மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

இப்புகைப்படம் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டவையா என Google AI Detector கருவியின் மூலம் ஆராய்ந்ததில், இவை 70 வீதம் AI மூலமாக உருவாக்கப்பட்ட புகைப்படம் என்பதையும் உறுதிப்படுத்த முடிந்தது.

அதே நேரம், ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி தளங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்திய அமெரிக்காவின் B-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள் தாக்குதலின் பின்னர் மிசோரியில் உள்ள வைட்மேன் விமானப்படை தளத்திற்கு பாதுகாப்பாகத் திரும்புவதைக் காட்டும் வீடியோவை அமெரிக்கா பகிர்ந்து கொண்டுள்ளது.

link : https://www.newsx.com/world/welcome-home-boys-b-2-bombers-return-home-after-iran-strikes-us-hails-greatest-force-for-freedom-8039/

https://truthsocial.com/@realDonaldTrump/114735730944623949

மேலும், ஈரானும் இந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்பையும் விடுக்கவில்லை.

ஆகவே ஈரானில் ஒரு அமெரிக்க B-2 குண்டுவீச்சு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைக் காட்டுவதாகக் கூறும் இந்தப் படம், AI மூலமாக உருவாக்கப்பட்ட போலியான புகைப்படம் என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.

Latest updates

#FAKE

ஈரானிய கடற்படைக் கப்பல் தாக்கப்பட்டமை குறித்து இந்திய ராணுவத் தளபதி கூறியதாக பரவும் போலி வீடியோ

மார்ச் 11, 2026

#FAKE

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மூன்றாம் சார்லஸ் மன்னரைச் சந்தித்ததாகப் பரவும் போலி புகைப்படம்

பிப்ரவரி 28, 2026

#TRUE

இந்தியப் பயணிகளுக்கு இப்போது விசா மற்றும் ETA இன்றி இலங்கைக்கு வரலாம்

பிப்ரவரி 17, 2026

#Misleading

உயிரிழந்த அயூப்ராஜ் அருள் பயாஸின் வயது 17 : பொலிசாரின் அறிக்கையிலேயே தவறு ஏற்பட்டுள்ளது

பிப்ரவரி 16, 2026

Related Content

ஈரானிய கடற்படைக் கப்பல் தாக்கப்பட்டமை குறித்து இந்திய ராணுவத் தளபதி கூறியதாக பரவும் போலி வீடியோ

மார்ச் 11, 2026

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மூன்றாம் சார்லஸ் மன்னரைச் சந்தித்ததாகப் பரவும் போலி புகைப்படம்

பிப்ரவரி 28, 2026

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேயிலை கொழுந்து பறிக்கும் கூடையைச் சுமந்து செல்வது போன்ற புகைப்படம் போலியானது

பிப்ரவரி 12, 2026

நடிகர் விஜய்யின் படங்களை இலங்கையில் வெளியிட ஜனாதிபதி அநுர தடை விதிக்கவில்லை

ஆகஸ்ட் 28, 2025

ஜெசிக்கா ராட்கிளிப் என்ற கடல் பயிற்சியாளரை ஒர்கா (Orca) திமிங்கலம் கொன்றதாக பகிரப்படும் AI காணொளி

ஆகஸ்ட் 14, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection