Dialog Asiata பொதிகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதா?
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரூ.797 package இல் இம் மூன்று சமூக ஊடகங்கள் உட்பட instagram உம் சேர்க்கப்பட்டுள்ளது
by Anonymous |
செப்டம்பர் 30, 2024
இலங்கையில் அதிகளவான நுகர்வோர் பயன்படுத்தும் Dialog prepaid மற்றும் postpaid Package களின் விலைகள் அதிகரித்துள்ளதாக பதிவுகள் சில சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
“Dialog ரூ.547 Package இப்போது 797”, “நாளுக்கு நாள் அநியாயமாக கட்டணங்களை அதிகரிக்கும் Dialog sim ஐ ஒழிப்போம்” என்ற பதிவுகளே இவ்வாறு பகிரப்பட்டன.
https://www.facebook.com/100064481661635/posts/947899377369442/?mibextid=4MzKDw5ooBP2efJs
அப்பதிவுகள் Dialog நிறுவனத்தை நிராகரிக்க தூண்டுவது போல் இருப்பதால் factseeker இது குறித்து ஆராய்ந்தது.
இது குறித்து Dialog நிறுவனத்தின் கிளைத் தலைவரிடம் factseeker வினவிய போது, ரூ.547 மற்றும் ரூ.1299 Package கள் இன்னும் அப்படியே உள்ளன என்றும் மற்ற prepaid மற்றும் postpaid சேவைகளின் விலைகள் மாற்றப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
மேலும், புதிய package ரூ.797க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றும் தற்போதைய ரூ.547 package இல் facebook,whatsapp மற்றும் youtube ஆகிய சமூக ஊடகங்களை பயன்படுத்த முடியும் எனவும், புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரூ.797 package இல் இம் மூன்று சமூக ஊடகங்கள் உட்பட instagram உம் சேர்க்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், இந்த package களின் விலைகள் மாற்றப்பட்டு ஒரு வாரத்திற்கு மேலாகியுள்ளதாகவும் இந்த packageகளின் விலை மாற்றங்களில் வாடிக்கையாளர்களுக்கு அதிக நன்மைகளை அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
Dialog Asiata தனது வாடிக்கையாளர்களுக்கு குறுந்தகவலையும் அனுப்பியுள்ளது. இதைனையே சில வாடிக்கையாளர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
ஆகவே, சமூக வலைதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ள படி Dialog package களின் விலைகள் சில மாற்றப்பட்டுள்ளன என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.