சஜித்துக்கு நரேந்திர மோடி வாழ்த்துக்கூறியதாக பகிரப்படும் போலிச்செய்தி

நரேந்திர மோடி அவரது உத்தியோகபூர்வ x பக்கத்தில் அவ்வாறான செய்தியொன்றை பதிவிடவில்லை.
by Anonymous |
செப்டம்பர் 18, 2024

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆதரவளிப்பதாக அவரது x பக்கத்தில் பதிவிட்டுள்ளதாக செய்தியொன்று சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
இப்பதிவில் “எமது வெற்றி எப்படி இந்திய மக்களுக்கு நலவுள்ளதாகவும் பொருத்தமானதாகவும் அமைந்துள்ளதோ, அது போன்று இலங்கையில் சஜித்தின் வெற்றி அந்நாட்டு மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான பதிவொன்றை நரேந்திர மோடி அவரது உத்தியோகபூர்வ x பக்கத்தில் பதிவிட்டுள்ளாரா என factseeker ஆராய்ந்ததில், அவ்வாறான பதிவு எதனையும் அவர் தனது எந்தவொரு சமூக வலைதள பக்கத்திலும் பதிவிடவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
ஆகவே, சஜித் பிரேமதாசவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆதரவளிப்பதாக அவரது x பக்கத்தில் பதிவிட்டுள்ளது போன்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் போலியானதென்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.