பிரம்ம கமலம் (Brahmin lotus) என்று பகிரப்படும் மலர் போலியானது
விஞ்ஞான ரீதியில் பிரம்ம கமலம் தாவரங்கள் பற்றி உறுதிப்படுத்தவில்லை.
by Anonymous |
செப்டம்பர் 11, 2024
Brahmin lotus அல்லது Mythical rock lotus எனப்படும் தாமரை போன்ற ஒரு மலரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது. இந்தப் புகைப்படம் குறித்து தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் லுமாலி பண்டாரவிடம் factseeker வினவிய போது, பிரம்ம கமலம் எனப்படும் தாமரை மலர் குறித்து எந்த ஆராய்ச்சியும் முன்னெடுக்கவில்லை என்றும் இது AI மூலம் உருவாக்கப்பட்டது என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
மேலும் பிரம்ம கமலம் பற்றிய அறிவியல் தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக களனி பல்கலைக்கழகத்தின் தாவரம் மற்றும் உயிரியல் துறையின் பேராசிரியர் பிரியங்கனி சேனாநாயக்கவிடம் factseeker வினவியபோது, Nelumbo nucifera என்பது நீரில் வளரக்கூடிய தாவரங்களின் ஒரு இனமாகும் எனவும் அத்தாவரம் நீரிற்க்கு வெளியே பாறைகளில் வளர வாய்ப்புகள் இல்லை, இது போன்ற எந்த தகவலும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அவர் factseeker இடம் தெரிவித்தார்.
மேலும் கிழக்கு நாடுகளில் உள்ள பெளத்த ,இந்து மற்றும் சீன புராணங்களில் இந்த பிரம்ம கமலம் மலரினை தூய்மை மற்றும் செழிப்பு என்பவற்றின் அடையாளமாக கருதப்படுகின்றது. ஆனால் விஞ்ஞான ரீதியில் பிரம்ம கமலம் தாவரங்கள் பற்றி உறுதிப்படுத்தவில்லை.
ஆகவே, brahmin lotus அல்லது mythical rock lotus எனப்படும் தாமரை போன்ற ஒரு மலரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்ற நிலையில் அது AI மூலமாக உருவாக்கப்பட்ட போலியாக மலர்கள் என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது