பிரபல வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஹமீத் காலமானதாக பகிரப்படும் போலிச்செய்திகள்

ஏற்கனவே இவ்வாறு அவர் காலமானதாக பல சந்தர்ப்பங்களில் போலிச் செய்திகள் பரப்பப்பட்டிருந்த நிலையில் மீண்டும் அவ்வாறு போலிச்செய்திகள் பரப்பப்படுகின்றன.
by Anonymous |
ஜூன் 24, 2024

இலங்கையின் பிரபல வானொலி அறிவிப்பாளராக இருந்து பின்னர் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அப்துல் ஹமீத் அவர்கள் திடீரென சுகவீனம் காரணமாக காலமானதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
இந்த செய்தியின் உண்மைத்தன்மை குறித்து factseeker ஆராய்ந்து பார்த்ததில், இவ்வாறு பகிரப்படும் செய்தியில் எந்த உண்மைத்தன்மையும் இல்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர், சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும் பின்னர் அவர் குணமடைந்து தற்போது கிருலப்பனையில் உள்ள அவரது இல்லத்தில் சுகதேகியாக இருப்பதுடன், factseeker இடமும் அவர் உரையாடியிருந்தார்.
அதுமட்டுமன்றி இன்று பிற்பகல் ஊடகவியலாளர்கள் சிலரும் அப்துல் ஹமீத் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்திருந்தனர்.
ஏற்கனவே இவ்வாறு அவர் காலமானதாக பல சந்தர்ப்பங்களில் போலிச் செய்திகள் பரப்பப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் அதேபோன்று பொய்யான செய்திகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்ற போதிலும் அவற்றில் எந்த உண்மைத்தன்மையும் இல்லை என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.