“வேற்றுக்கிரகவாசியா? ” என பலராலும் கேள்வி எழுப்பப்படும் காணொளி திரைப்பட பிரச்சாரக்காட்சியாகும்

‘ஏலியன்’ போன்று வேடமிட்டு ஒருவர் நடமாடுவது இந்த ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் திகதி வெளியான ஜூல்ஸ் (jules) திரைப்படத்திற்காக எடுக்கப்பட்ட பிரச்சாரக்காட்சியாகும்.
by Anonymous |
ஆகஸ்ட் 14, 2023
நீண்ட காலமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ‘ஏலியன்ஸ்’ குறித்து பேசப்பட்டு வருகின்ற நிலையில் இந்தியா போன்ற நாடுகளிலும் அண்மைய நாட்களாக ‘ஏலியன்ஸ்’ குறித்து பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வேற்றுக்கிரகவாசி (ஏலியன்) என தெரிவிக்கப்படும் வீடியோவொன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருவதை factseeker அவதானித்தது.
இவ்வாறு பகிரப்படும் வீடியோவில் ‘ஏலியன்’ உருவத்தில் ஒருவர் பொது இடங்களில் மக்களுடன் மக்களாக நடமாடுவதையும், ரயிலில் பயணிப்பதையும் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பலர் பகிர்ந்து வருகின்றனர். இவ்வாறு பரப்பப்படும் வீடியோவில் காணப்படுவது என்னவென பலர் கேள்வியும் எழுப்பியுள்ளனர்.
எனினும் இவ்வாறு ‘ஏலியன்’ போன்று வேடமிட்டு ஒருவர் நடமாடுவது இந்த ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் திகதி வெளியான ஜூல்ஸ் (jules) திரைப்படத்திற்காக எடுக்கப்பட்ட பிரச்சாரக்காட்சியாகும். இந்த திரைப்படத்தில் “ஜூல்ஸ்” வேடத்தில் ஜேட் குவான் நடித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.