நித்யாமேனன் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டாரென கூறும் செய்தி உண்மைக்கு புறம்பானது
Buzzbasket, ursbuzzbasket, letscinema மற்றும் இதர ஊடகங்கள் இவ்வாறு பொய்யான செய்திகளை பகிராது மனிதத் தன்மைகளுடன் இருக்க வேண்டும். போலி செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்
by Anonymous |
செப்டம்பர் 28, 2023
இந்திய நடிகை நித்யாமேனன் தமிழ் திரையுலகில் உள்ள நடிகர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறி செய்தியொன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இந்த செய்தி தற்போது இலங்கையின் முன்னணி செய்தி நிறுவனங்களினாலும் பிரசுரிக்கப்பட்டு வருவதை factseekerஇனால் அவதானிக்க முடிந்தது.
உண்மை என்ன ?
இது குறித்து நடிகை நித்யாமேனன் தனது உத்தியோகபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். அதில், அவர் குறித்து இவ்வாறு பரவும் செய்தி போலியான செய்தி எனவும், “ஒரு குறுகிய காலத்திற்குள்ளேயே நாம் அனைவரும் இத்தகைய செய்திகளுடன் இருக்கிறோம். எப்போதும் நாம் ஒருவருக்கொருவர் எவ்வளவு தீங்கு விளைவிக்கிறோம் என்பது எனக்கு ஆச்சரியமாகவே உள்ளது. இதற்கு பொறுப்பேற்று நான் பதில் கூறினால் மட்டுமே இதுபோன்ற மோசமான நடத்தைகள் நிறுத்தப்படும் என்பதால் இந்த சந்தர்ப்பத்தில் இதனை நான் சுட்டிக்காட்டுகிறேன். Buzzbasket, ursbuzzbasket, letscinema மற்றும் இதர ஊடகங்கள் இவ்வாறு பொய்யான செய்திகளை பகிராது மனிதத் தன்மைகளுடன் இருக்க வேண்டும். போலி செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முடிவு
ஆகவே தமிழ் நடிகர் ஒருவரால் தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக நடிகை நித்யாமேனன் தனது பேட்டியில் கூறியதாக சமூக ஊடகங்களிலும், இலங்கை மற்றும் இந்திய பிரதான ஊடகங்களிலும் பகிரப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என்பதை உறுதிப்படுத்த முடிகின்றது.