இது யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வல்ல
யாழ்.பல்கலைக்கழகத்தில் தைப்பொங்கல் விழா இவ்வருடம் கொண்டாடப்பட்டதாக கூறும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
by Anonymous |
ஜனவரி 29, 2024
இந்தக் காணொளியில் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் தமிழ்ப் பாடலைப் பாடும் காட்சியெனக் கூறியே இந்த காணொளி பகிரப்படுகின்றது. இது உண்மையாகவே யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வுதானா என்பதை கண்டறியுமாறு factseekerரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. எனவே அதைப் பற்றி factseeker ஆராய்ந்து பார்த்ததில்,
இந்த காணொளியின் பின்னணியை உன்னிப்பாக கவனிக்கும்போது, இது யாழ் பல்கலைக்கழக கட்டிடங்களை ஒத்திருக்கவில்லை என்பதுடன், அதில் உள்ள சின்னத்தை கவனிக்கும் போது, மாலபேயில் உள்ள SLIIT ஸ்தாபனத்தின் சின்னத்தை ஒத்ததாக வெளிப்பட்டது.
யாழ்.பல்கலைக்கழகத்தில் தைப்பொங்கல் கொண்டாட்டத்தின் போது இவ்வாறான சம்பவம் இடம்பெற்றதா என யாழ்.பல்கலைக்கழக மாணவர் செயற்பாட்டாளர்களிடம் Factseeker வினவியபோது, அவ்வாறானதொன்று நடக்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் இது குறித்து மாலபே SLIIT நிறுவனத்திடம் கேட்டபோது, தைப்பொங்கல் பண்டிகையின் போது தங்கள் பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ் தேசிய உடை அணிந்து வந்து தமிழ் பாடல்களை பாடியதாகவும், அதில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
SLIIT நிறுவனத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தை பார்வையிட்டபோது, அதில் குறித்த நிகழ்வு தொடர்பான முழுமையான காணொளிகள் மற்றும் புகைப்படங்களை பதிவேற்றியுள்ளனர். அதன் லிங்க் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
https://www.facebook.com/media/set/?vanity=sliit.fcmu&set=a.748337687340147
ஆகவே, இது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் காணொளி அல்ல என்றும் மாலபே SLIIT பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வு என்பதையும் factseeker உறுதிப்படுத்துகிறது.