வாட்ஸ்-அப் தொடர்பில் போலிச்செய்திகள் பகிரப்படுகின்றன
வாட்ஸ்-அப் புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக சில பதிவுகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறன.
by Anonymous |
பிப்ரவரி 9, 2024
இது போன்ற பதிவுகள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது பகிரப்படுகிறமை குறிப்பிடத்தக்கது. இந்த இடுகையில், சமூக ஊடகங்களில் நீங்கள் புதிய விதிகளால் கண்காணிக்கப்படுவீர்கள் என்றும், புதிய தகவல்தொடர்பு விதிமுறைகளின்படி, வாட்ஸ்அப், பேஸ்புக், எக்ஸ் அழைப்புகள் பதிவு செய்யப்படும் என்றும் அவை அனைத்தும் அரச கண்காணிப்புக்கு உட்பட்டவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அனாவசிய செய்திகளை அனுப்புவதைத் தவிர்க்கவேண்டும் எனவும் இதில் செய்திகள் பகிரப்படுகிறன.
வாட்ஸ்- அப் மூலம் செய்திகளை அனுப்பிய பின் (சரி அடையாளம்) குறித்த குறிப்பு : மூன்று நீல நிற “சரி” அடையாளங்கள் இருப்பின் கோரிக்கையை அரசாங்கம் கவனத்தில் எடுத்துள்ளது என்றும், சிவப்பு நிறத்தில் ” சரி” அடையாளம் இருந்தால், அரசாங்கம் உங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது என்றும் அர்த்தம் என குறிப்பிடப்பட்டுள்ளது. நிகழ்நிலைக் காப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதன் பின்னணியில் இதுபோன்ற செய்திகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படுவதாலும், factseekerஇற்கு இதன் உண்மைத்தன்மையை ஆராயுமாறு வலியுறுத்தப்பட்டதனாலும் factseeker இது குறித்து ஆராய்ந்து பார்த்தது.
WhatsApp நிறுவனம் கூறுவது என்ன ?
இந்த அறிகுறிகள் குறித்து, WhatsApp தனது உத்தியோகபூர்வ இணையதளத்தில் பின்வருவனவற்றைக் குறிப்பிட்டுள்ளது:
• செய்தி வெற்றிகரமாக அனுப்பப்பட்டது
• வெற்றிகரமாக அனுப்பப்பட்ட செய்தி சம்பந்தப்பட்ட நபரின் தொலைபேசி அல்லது சாதனத்தில் வெற்றிகரமாகப் பெறப்பட்டது.
• செய்தியைப் பெற்ற நபரால் செய்தி வாசிக்கப்படுகிறது.
இந்த மூன்று மதிப்பெண்கள் மட்டுமே உத்தியோகபூர்வமாக வாட்ஸ்-அப் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது, மற்ற மதிப்பெண்கள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. மேலும், சமூக ஊடக வலையமைப்பில் செய்திகளை அனுப்புவதற்கு வாட்ஸ்அப் என்ட் டு என்ட் என்க்ரிப்ஷனைப் பயன்படுத்துவதுடன், தனிப்பட்ட செய்திகள் மற்றும் அழைப்புகளின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு மாறாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்கள் பாதுகாக்கப்படுகின்றதுடன் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் அவற்றைப் வாசிக்கவோ கேட்கவோ முடியாது என்பதை வாட்ஸ்-அப் நிறுவனம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.
-இலங்கை CERT இது குறித்து தெரிவிக்கையில்,
இது தொடர்பில் இலங்கை CERT இடம் வினவியபோது, அவ்வாறானதொரு நிலை குறித்து தமக்கு அறிவிக்கப்படவில்லை என தெரிவித்ததுடன், இதுபோன்ற விடயங்களை செயல்படுத்துவதில் சட்ட மற்றும் நடைமுறை சிக்கல்கள் ஏற்படலாம் எனவும் இலங்கை CERT தெரிவித்தது.
-தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் கருத்து
இது தொடர்பில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் முறைப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் திருமதி மேனக பத்திரனவிடம் factseeker மேற்கொண்ட விசாரணையில், அவ்வாறான தீர்மானங்கள் எதையும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்தார். இருப்பினும், சமூக வலைதளங்களை மக்கள் அவதானத்துடன் பயன்படுத்துமாறு அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.
– இந்தியாவிலும் இதேபோன்று செய்திகள் பகிரப்படுகின்றன.
இது குறித்து factseeker ஆராய்ந்து பார்த்தபோது, இந்த செய்தி பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு நாடுகளில் பகிரப்பட்டு வருவதுடன், இந்தியாவிலும் இதேபோன்று செய்திகள் பகிரப்படுகின்றமையையும் factseekerஇனால் அவதானிக்க முடிந்தது.
அதன்படி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் இந்த செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்பதை factseekr உறுதிப்படுத்துகிறது.