“சீனா ஹம்பாந்தோட்டையை இராணுவத் துறைமுகமாக பயன்படுத்துகிறது” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியதாக தவறாக செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது
"சீனா ஹம்பாந்தோட்டையை இராணுவத் துறைமுகமாக பயன்படுத்துகிறது; அமெரிக்காவில் எதிர்ப்பை வெளியிட்ட ரணில்" என தலைப்பிடப்பட்டு, 'அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா இராணுவத் துறைமுகமாக பயன்படுத்துவதையிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கவலை வெளியிட்டுள்ளார்' என தெரிவிக்கும் செய்தியொன்று "ஒருவன்" இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
by Anonymous |
நவம்பர் 13, 2023
“சீனா ஹம்பாந்தோட்டையை இராணுவத் துறைமுகமாக பயன்படுத்துகிறது; அமெரிக்காவில் எதிர்ப்பை வெளியிட்ட ரணில்” என தலைப்பிடப்பட்டு, ‘அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா இராணுவத் துறைமுகமாக பயன்படுத்துவதையிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கவலை வெளியிட்டுள்ளார்’ என தெரிவிக்கும் செய்தியொன்று “ஒருவன்” இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடருடன் இணைந்ததாக நியூயோர்க் நகரில் கடந்த (18) நடைபெற்ற கடல்சார் நாடுகளுக்கான 3ஆவது இந்து – பசுபிக் தீவு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டதாகவும் “ஒருவன்” இணையதளம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும் இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியதாக “ஒருவன்” இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ள செய்தியானது தவறான அர்த்தப்படுத்தல் என்பதை factseeker தெரிவிக்க விரும்புகின்றது.
இந்து – பசுபிக் தீவு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, “ஹம்பாந்தோட்டை வர்த்தகத் துறைமுகத்தை சீன இராணுவத் தளமாக முத்திரை குத்துவது தொடர்பில் இலங்கை கவலையடைகிறது. இந்தியாவுடன் இணைந்து திருகோணமலைத் துறைமுகத்தை இலங்கை அபிவிருத்தி செய்து வருவதாகவும், சர்வதேச அரங்கில் இந்த விடயத்தை முன்வைக்க விரும்புகிறோம்” எனவும் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த கலந்துரையாடலில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா தனது இராணுவத் துறைமுகமாக பயன்படுத்துவதாக ஜனாதிபதி தெரிவிக்கவில்லை என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.
ஜனாதிபதி இந்து – பசுபிக் தீவு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் ஆற்றிய உரையின் முழுமையான வடிவத்தையும் factseeker இங்கே இணைத்துள்ளது. இந்து – பசுபிக் தீவு