இந்த பிள்ளையார்ப்பண்டிகை பிரான்சில் நடைபெற்றதாகும்

இந்துக்களின் சமய வலிபாடொன்றில் ஆயிரக்கணக்கான தேங்காய்களை உடைத்து வழிபடும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்ற நிலையில், இது இலங்கைத் தமிழர்கள் முன்னெடுக்கும் செயற்பாடு எனவும் அதேபோல் இந்தியாவில் இது இடம்பெறுவதாகவும் பதிவிடப்பட்டு பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
by Anonymous |
செப்டம்பர் 12, 2023

இந்துக்களின் சமய வலிபாடொன்றில் ஆயிரக்கணக்கான தேங்காய்களை உடைத்து வழிபடும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்ற நிலையில், இது இலங்கைத் தமிழர்கள் முன்னெடுக்கும் செயற்பாடு எனவும் அதேபோல் இந்தியாவில் இது இடம்பெறுவதாகவும் பதிவிடப்பட்டு பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
இதன் உண்மைத்தன்மை குறித்து factseeker ஆராய்ந்து பார்த்ததில், இந்த நிகழ்வு பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் இடம்பெறும் பிள்ளையாருக்கான பண்டிகை என்பதையும், இது பல்வேறு சுற்றுலாப்பயணிகளை கவர்ந்து ஒன்றிணைக்கும் விதமாக நடத்தப்படுகின்றது என்பதையும் கண்டறிய முடிந்தது. சகல நாடுகளிலும் உள்ள இந்துக்கள் இந்த திருவிழாவை கொண்டாடுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பகிரப்படும் காணொளியானது, கடந்த ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பாரிஸில் நடைபெற்றுள்ளதுடன், பல்வேறு நாடுகளின் பக்தர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.