திஸ்ஸ குட்டியாராச்சிக்கு அரசாங்கம் வாகனமொன்று வழங்கியதாக பரவும் செய்தி உண்மையானதா?
பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜானக திஸ்ஸ குட்டியாராச்சிக்கு அவரது தனிப்பட்ட பாவனைக்காக அரசாங்கம் நவீன பிராடோ காரை வழங்கியதாக சமூக வலைத்தளங்களிலும் இணையத்தளங்களிலும் அண்மையில் பல செய்திகள் பரவி வருகின்றன.
by Anonymous |
செப்டம்பர் 12, 2023
பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜானக திஸ்ஸ குட்டியாராச்சிக்கு அவரது தனிப்பட்ட பாவனைக்காக அரசாங்கம் நவீன பிராடோ காரை வழங்கியதாக சமூக வலைத்தளங்களிலும் இணையத்தளங்களிலும் அண்மையில் பல செய்திகள் பரவி வருகின்றன.
புழக்கத்தில் உள்ள செய்தி
“திஸ்ஸ குட்டியாராச்சிக்கு புதிய பிராடோ கார்! – பின்வரிசை உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சிக்கு அண்மையில் புத்தம் புதிய பிராடோ கார் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் அமைச்சர்கள் பலர் சாதாரண வாகனத்தில் பயணித்த போது, பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி அரசாங்கத்தை எதிர்த்து நின்று பிரடோ காரை பெற்றுக்கொண்டதாக தெரிவித்திருந்தார். “