மௌபிமவின் பக்க வடிவமைப்பில் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தொடர்பில் போலிச்செய்தி

செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துங்கொட சுகவீனமுற்றே உயிரிழந்தார்
by Anonymous |
ஜனவரி 12, 2026

சமூக வலைதளங்களில் பிரபலமான செயற்பாட்டாளராக இருந்த தர்ஷன ஹந்துங்கொடவை ராஜபக்சவினர் கொலை செய்ததாக பிரதி அமைச்சர் சுனில் வட்டகல மௌபிம பத்திரிகைக்கு செவ்வியொன்றில் தெரிவித்துள்ளதாக மௌபிம பத்திரிகையின் வடிவமைப்புடன் குறித்த செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதனை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
மௌபிம ஞாயிறு பதிப்பு (11) நடத்திய நேர்காணலின் போது கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதைக் குறிப்பிட்டதாக சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்ற நிலையில் இது குறித்து விமர்சனங்களும் எழுந்துள்ளன.
அதற்கமைய இதன் உண்மைத்தன்மையை factseeker ஆராய்ந்தபோது, மௌபிம பத்திரிகையில் அத்தகைய நேர்காணல் அல்லது செய்தி எதுவும் வெளியிடப்படவில்லை என்பதை கண்டறிய முடிந்தது.
இதன் உண்மைத்தன்மையை மேலும் உறுதிப்படுத்துவதற்காக, மௌபிம பத்திரிகையின் தலைமை ஆசிரியர் சமிந்த வாரியகொடவிடம் வினவியபோது, அத்தகைய செய்தி அல்லது நேர்காணல் எதுவும் தனது பத்திரிகையில் வெளியிடப்படவில்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
ஆகவே பிரதி அமைச்சர் சுனில் வட்டகல இவ்வாறான தகவல் ஒன்றினை தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தியானது போலியானது என்பதுடன், மௌபிம பத்திரிகையின் பக்க வடிவமைப்பை பயன்படுத்தி போலியாக இந்த செய்தி உருவாக்கப்பட்டுள்ளது எனவும் factseeker உறுதிப்படுத்துகின்றது.
