விக்டோரியா, மொரகஹகந்த மற்றும் கொத்மலை நீர்த்தேக்கங்களில் அணைக்கட்டு உடையும் அபாயம் இருப்பதாக பகிரப்படும் போலிச்செய்திகள்

விக்டோரியா, மொரகஹகந்த மற்றும் கொத்மலை நீர்த்தேக்கங்களில் உள்ள அணைக்கட்டுகள் சேதமடையவில்லை என்பதை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தின.
by Anonymous |
டிசம்பர் 1, 2025

நிலவும் மோசமான காலநிலை காரணமாக பல நீர்த்தேக்கங்களில் அணைகள் உடையும் அபாயம் இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன.
இந்த தகவல் பகிரங்கமானவுடன், பலர் அந்த பகுதிகளை விட்டு வெளியேற நடவடிக்கை எடுத்தனர்.
https://www.facebook.com/share/r/1Cuf6axxWt/
இவ்வாறு பகிரப்பட்ட செய்தியின் உண்மைத்தன்மை குறித்து factseeker ஆராய்ந்ததில்,
அவ்வாறு பகிரப்படும் செய்தியில் உண்மை இல்லை என்பதை அரச அதிகாரிகளின் ஊடாக உறுதிப்படுத்த முடிந்தது. மேலும், குறித்த தினங்களில் வினாடிக்கு 80 கன மீட்டர் தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்படுவதாகவும், இதனால் எந்தவொரு பேரழிவு அபாயமும் இல்லை என்பதையும் அவர்கள் உறுதிப்படுத்தினர்.
https://www.facebook.com/share/r/1DC12BDZ11/
மேலும் , விக்டோரியா, மொரகஹகந்த மற்றும் கோத்மலை நீர்த்தேக்கங்களில் அணைகள் உடையும் அபாயம் இல்லை என்பதை அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் உத்தியோகபூர்வமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இது குறித்து பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன,

https://hirunews.lk/433549/there-is-no-risk-of-moragahakanda-and-kotmale-dams-breaking-dmc?hl=en-GB
https://www.facebook.com/share/r/1By2fmWzvr/
https://www.facebook.com/share/v/1CiHPsapKS/
அதன்படி, விக்டோரியா, மொரகஹகந்த மற்றும் கொத்மலை நீர்த்தேக்கங்களில் அணைகள் உடையும் அபாயம் இருப்பதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்பதை FactSeeker உறுதிப்படுத்துகின்றது.
