சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படும் நடிகை சாய் பல்லவியின் AI புகைப்படங்கள்

சமூக வலைதளங்களில் ஆதிக்கம் செலுத்தும் AI தொழிநுட்ப புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தொடர்பில் சமூக வலைதள பாவனையாளர்கள் கூடிய கவனம் செலுத்தவேண்டும்
by Anonymous |
செப்டம்பர் 26, 2025

இந்திய திரைப்பட நடிகை சாய் பல்லவி தனது சகோதரியுடன் கடற்கரையில் ஓய்வெடுக்கும்போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. அவரது ரசிகர்கள் பலர் இந்த புகைப்படங்கள் குறித்து தமது கருத்துக்களை பதிவிட்டு வருவதுடன் அதிக விமர்சனங்களும், அதிக பகிர்வுகளும் இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது.
எனினும் சமூக வலைதளங்களில் பகிரப்படும் இந்த புகைப்படங்களில் பெரும்பாலானவை AI தொழினுட்பத்தை கொண்டு உருவாக்கப்பட்ட புகைப்படங்களாகும்.
குறிப்பாக நடிகை சாய் பல்லவியின் சகோதரி பூஜா கண்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட சில புகைப்படங்களை கொண்டே இவ்வாறு AI புகைப்படங்களாக உருவாக்கப்பட்டுள்ளன.
ஆகவே தற்போது அதிகளவில் சமூக வலைதளங்களில் ஆதிக்கம் செலுத்தும் AI தொழிநுட்ப புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தொடர்பில் சமூக வலைதள பாவனையாளர்கள் கூடிய கவனம் செலுத்தவேண்டும் என factseeker வலியுறுத்துகின்றது.