நீதிபதி நிலுபுலி லங்காபுர, தயா லங்காபுரவின் மகள் அல்ல.

கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர, இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் தலைவர் தயா லங்காபுரவின் மகள் என சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி பொய்யானது
by Anonymous |
ஆகஸ்ட் 25, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர, இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் தலைவர் தயா லங்காபுரவின் மகள் என சமூக வலைதளங்களில் பதிவுகள் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
இது குறித்து factseeker ஆராய்ந்ததில், இவ்வாறு பகிரப்படும் செய்தி உண்மையல்லை என்பதை factseeker இனால் கண்டறிய முடிந்தது.
இது குறித்து இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் தலைவர் தயா லங்காபுரவிடம் வினவியபோது, தனது மகள் வங்கி அதிகாரியாக பணிபுரிவதாகவும், நிலுபுலி லங்காபுர தனது மகள் அல்ல என்றும் அவர் கூறினார்.
ஆகவே, கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர, இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் தலைவர் தயா லங்காபுரவின் மகள் என சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி பொய்யானது என factseeker உறுதிப்படுத்துகின்றது.