டில்வின் சில்வாவின் புகைப்படமென பகிரப்படும் தவறான புகைப்படம்

இப் புகைப்படம் 1983 கருப்பு ஜூலையுடன் தொடர்புடையதாகும்.
by Anonymous |
மார்ச் 20, 2025

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் கடந்த 15ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போது ஒரு புகைப்படத்தை காண்பித்து, அது மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) உறுப்பினர் ஒரு நபரை நிர்வாணமாக்கி தாக்கும் புகைப்படம் என தெரிவித்திருந்தார்.
பின்னர் அப் புகைப்படத்தில் இருப்பது மக்கள் விடுதலை முன்னணியின் பொது செயலாளர் டில்வின் சில்வா என சமூக வலைதளங்களில் சில பதிவுகள் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
இது பல்வேறு சந்தர்ப்பங்களில் சமூக ஊடகங்களில் வெளிவந்ததால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.
அப் புகைப்படத்தை Google Reverse Image மூலம் ஆராய்ந்ததில், இது 1983 ஆம் இடம்பெற்ற கருப்பு ஜூலை கலவரத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதை அறிய முடிந்தது.
மேலும், இலங்கையின் உண்மை சரிப்பரப்பு தளமான Fact Crescendo, இப் புகைப்படம் குறித்து கட்டுரையொன்றை வெளியிட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது. அக் கட்டுரையில் இப்புகைப்படம் முதன்முதலில் 1997 இல் ராவய பத்திரிகையில் வெளியிடப்பட்டது என்றும் அதில் இருப்பது மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) உறுப்பினர்கள் இல்லை என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆகவே,பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் பாராளுமன்றத்தில் காட்சிப்படுத்திய புகைப்படம் 1983 கருப்பு ஜூலையுடன் தொடர்புடையது என்பதையும், அப் புகைப்படத்தில் இருப்பது மக்கள் விடுதலை முன்னணியின் பொது செயலாளர் டில்வின் சில்வா அல்ல என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகிறது.